அனைவரும் ஒன்றாக செயல்பட்டால், எதையும் சாதிக்கமுடியும்

சர்வதேசளவிலான வர்த்தகம் மற்றும் பொருட்கள் வினியோக முறைகளில், இந்திய வங்கிகள் மற்றும் ரூபாய் முக்கியபங்கு வகிக்க வேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.நாட்டின், 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இதன் ஒருகட்டமாக, ஒருவார சிறப்பு கொண்டாட்டத்துக்கு, மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

டில்லியில் நேற்று நடந்தநிகழ்ச்சியில், ‘ஜன் சமர்த்’ எனப்படும் மத்திய அரசின் கடன் திட்டங்களை அறிந்து கொள்வதற்கான இணைய தளத்தை மோடி துவக்கி வைத்தார். மேலும், 75வது சுதந்திர தினத்தையொட்டி, 1, 2, 5, 10, 20 ரூபாய் மதிப்புள்ள புதிய நாணயங்களையும் அவர்வெளியிட்டார். பார்வை திறன் இல்லாதவர்கள் எளிதில் அடையாளம்காணும் வகையில் இந்த நாணயங்களில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.இந்த நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:நிதித்துறை சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இணையதளங்கள் உட்பட பல வசதிகளை செய்துஉள்ளோம்.

இதை மக்கள் முழுமையாகதெரிந்து, பயன்படுத்திக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.நம்முடைய நிதிசேவை திட்டங்கள், தீர்வுகள் சர்வதேச அளவுக்கு விரிவடைய வேண்டும். சர்வதேச அளவிலான வர்த்தகம், பொருட்கள் வினியோக முறைகளில் இந்தியவங்கிகள் மற்றும் ரூபாய் முக்கிய பங்கை வகிக்க வேண்டும்.நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட்டால், இந்தியாவால் எதையும் சாதிக்கமுடியும் என்பதை, கடந்த எட்டு ஆண்டுகளில் பலமுறை நிரூபித்துஉளோம். தற்போது உலக நாடுகள், இந்தியாவை வெறும் சந்தையாக பார்க்கவில்லை. புதிய மாற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள், பிரச்னைகளுக்கு தீர்வுஅளிக்கும் நாடாக பார்க்கின்றன.

ஒரு காலத்தில், அரசு வழங்கும் மானியங்கள், திட்டங்கள், கடன்களைப் பெறுவதற்கு மக்கள் நடையாய்நடக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அரசின் செயல்பாடுகள் மாறியுள்ளன. மக்கள் நலனை சார்ந்ததாக அரசின் நிர்வாகம் உள்ளது.அதன்படியே, அரசின்கடன் திட்டங்களை தெரிந்துகொள்ளவும், விண்ணப்பிக்கவும், பல தளங்களை தேட வேண்டிய அவசியம் இனி இல்லை. ஜன்சமர்த் இணையதளத்தில் அனைத்து விபரங்களும் கிடைக்கும்.தொழில்கள் செய்வதற்கு தடையாகஇருந்த, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதிகள், 1,500க்கும் மேற்பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

இளைஞர்கள் தொழில்கள் செய்வதை சுலபமாக்கி யுள்ளதுடன், அவர்கள் புதிய உச்சத்தை எட்டவும் வாய்ப்பு தரப்படுகிறது.வரி முறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி முறை அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது மாதத்துக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரி வசூல் செய்யப்படுகின்றது.நாட்டில் தற்போது, 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.