பா.ஜ.க தேசியபொது செயலாளரும், மராட்டிய மாநில பொறுப்பாளருமான சி.டி.ரவி நேற்று ரிசிம்பாக் பகுதியில் உள்ள டாக்டர் ஹெட்ஜேவார் ஸ்மிருதி மந்திருக்கு வந்திருந்தார்.
அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:-
மராட்டியத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் மகாவிகாஸ் அகாடி அரசு நீண்டகாலம் நீடிக்காது என நான் நினைக்கிறேன். மக்கள் இந்தஅரசின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டனர். நம்பர் விளையாட்டு விளையாடும் இந்த அரசு எத்தனைநாள் நீடிக்கும்?
மராட்டியத்தில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சியில் இல்லை. எங்கள் அரசு ஆட்சிக்குவந்ததும் உத்தரபிரதேச மாநிலத்தில் கொண்டு வந்தது போன்று பசுவதைக்கு தடைவிதிக்கப்படும். மேலும் “லவ் ஜிகாத்”துக்கு எதிரான சட்டமும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மும்பைக்கு வந்ததற்கு மராட்டிய ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஆளும் கட்சியினரால் அவரை போல வேலைசெய்ய முடியாது. எனவே அவர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ... |