ஆக்கிரமிப்பவர்களை புகழ்வது தேச துரோகம் – யோகி ஆதிதித்யநாத்

அவுரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன
நாக்பூரில் கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.
மகாராஷ்டிரத்தின் அவுரங்கபாத் நகரில் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற இந்துத்துவ அமைப்புகளின் போராட்டம் நாக்பூரில் வன்முறையாக மாறியது. கடைகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டு மக்கள் தாக்கப்பட்டனர்.

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் நகரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஆக்கிரமிப்பாளர்களை (அவுரங்கசீப்) புகழ்வது தேசத்துரோகமாகும். நமது முன்னோர்களை அவமதித்தவர்களை, நமது பெண்களை துன்புறுத்தியவர்களை, நமது நம்பிக்கையை பழித்தவர்களை புகழ்வதை புதிய இந்தியா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது

ஒவ்வொரு இந்திய குடிமகனும் நமது அடையாளத்தை அழிக்க முயன்றவர்களை பாராட்டுவதை விட, நமது புகழ்பெற்ற தலைவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

முன்னதாக சிவாஜி மகாராஜின் சிலையை திறந்து வைக்கும் விழாவில் பேசிய ஏக்நாத் ஷிண்டே, அவுரங்கசீப் மகாராஷ்டிராவைக் கைப்பற்ற வந்தார், ஆனால் அவர் சிவாஜி மகாராஜின் தெய்வீக சக்தியை எதிர்கொண்டார். இன்னும் அவரை (அவுரங்கசீப்பை) புகழ்ந்து பாடுபவர்கள் துரோகிகளைத் தவிர வேறில்லை என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.