கோவா பஞ்சாயத்து தேர்தல் பாஜக மிகப்பெரிய வெற்றி

கோவா மாநிலத்தை ஆளும் பாஜக ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 49 இடங்களில் 32 இடங்களை வென்றது, எதிர் கட்சியான காங்கிரஸ் மிகமோசமாக தோற்றது. வெறும் நான்கு இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது.

மொத்தம் 50 இடங்களைகொண்ட மாநிலத்தின் ஜில்லா பஞ்சாயத்துகளில் 48 இடங்களுககு டிசம்பர் 12 அன்று வாக்களிப்பு நடந்தது. ஒருதொகுதியில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தாலும், மற்றொரு தொகுதியில் ஒரு வேட்பாளரின் மரணம் காரணமாக தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

திங்கள்கிழமை அறிவிக்கப்பட் முடிவுகளின் படி, பாஜக 32 இடங்களையும், சுயேச்சைகள் ஏழு இடங்களையும், காங்கிரஸ் நான்கு, எம்ஜிபி மூன்று இடங்களையும், என்சிபி மற்றும் ஆம் ஆத்மிகட்சி (ஆம் ஆத்மி) தலா ஒருஇடங்களையும் வென்றன.

2022 சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிட இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தசூழலில் ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் ஆம் ஆத்மி தனது முதல்வெற்றியை பதிவு செய்துள்ளது.

32 இடங்களில் வென்றுள்ளதால் உற்சாகம் அடைந்துள்ள முதல்வர் பிரமோத்சாவந்த், பாரதீய ஜனதா மற்றும் என் தலைமையின் கீழ் பணிபுரியும் கோவா அரசு மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காக கோவாமக்கள் முன் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். அதே நம்பிக்கையையும், முன்னேற்றத்தையும் முன்னெடுத்து செல்வேன் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...