பிரதமர் நரேந்திரமோடி நேற்று திடீரென டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்று வழிபாடுநடத்தினார். முன்னறிவிப்பு இல்லாமல் பிரதமர் சென்றதால், பெரியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
டெல்லியில் உள்ள ரகாப்கஞ்ச் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி நேற்றுகாலை திடீரென சென்றார். அங்கு அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்றனர். குருத் வாராவில் மோடிவழிபட்டார். நேற்று முன்தினம் சீக்கிய மத குரு தேஜ் பகதூரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டநிலையில், தேஜ்பகதூருக்கு மோடி அஞ்சலி செலுத்தினார்.
முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென மோடிசென்றதால் அங்கு பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. போக்குவரத்து தடைகளும் இல்லை. பஞ்சாப், ஹரியாணா வைச் சேர்ந்த சீக்கிய விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், குருத்வாராவில் மோடி வழிபாடுநடத்தியிருப்பது குறிப்பிட தக்கது.
டெல்லி குருத்வாராவில் தான்வழிபட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
மேலும், ட்விட்டரில் அவர்வெளியிட்ட பதிவுகளில், ’’வரலாற்று சிறப்புமிக்க ரகாப்கஞ்ச் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தேன். அங்குதான் குருதேஜ்பகதூரின் உடல்தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானோரைப் போல நானும் குருதேஜ்பகதூரின் கருணையால் ஈர்க்கப்பட்டேன். வரலாற்று ரீதியாக ஆசீர்வதிக் கப்பட்ட இந்த தருணத்தில் குரு தேஜ்பகதூரின் லட்சியங்களைப் போற்றிக் கொண்டாடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க ரகாப்கஞ்ச் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தேன். அங்குதான் குரு தேஜ்பகதூரின் உடல்தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்.
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |