பிரதமர் மோடியின் 107 வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக புத்தகம்

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் என்பது எதிர்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒருவிஷயமாகும். மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக ஊர்சுற்றுகிறார் பிரதமர் என எதிர்கட்சித் தலைவர்கள் சாடினர்.ஆனால் பிரதமரின் பயணங்களால் நாட்டிற்கு நன்மைதான் கிடைத்தது என பாஜகவின் அக்குற்றச்சாட்டை மறுத்துவருகின்றனர்.

இந்நிலையில் பாஜக பிரமுகர் ஒருவர் பிரதமர் மோடியின் 107 வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். “Modi India Calling – 2021″என்ற தலைப்பிலான இப்புத்தகத்திற்கான விதையிட்டவர் பாஜக தலைவர் விஜய்ஜாலி. டெல்லிமாநில பாஜக தலைவர் அதேஷ் குப்தா இப்புத்தகத்தை வெளியிட்டார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து மகாத்மாகாந்தி நாடு திரும்பிய ஜனவரி 9ம் தேதியை Pravasi Bharatiya Divas என மத்திய அரசு கொண்டாடிவருகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்திய சமூகத்திற்கு, இந்திய அரசுக்குமான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்நாளை முதல்முறையாக வாஜ்பாய் தலைமையிலான அரசின்போது 2003ல் அனுசரித்தனர். 2015 வரைஆண்டுதோறும் கொண்டாடப்பட்ட இந்நாள் தற்போது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. Pravasi Bharatiya Divas-ஐ முன்னிட்டு இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.

புத்தகம் தொடர்பாக பேசிய பாஜக தலைவர் விஜய்ஜாலி, “பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் எந்தவகையில் நாட்டுக்கு நன்மையை சேர்த்தன, மோடி எவ்வாறு வெளிநாட்டு தலைவர்களால் மதிக்கப்பட்டார், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவற்றை பெரியளவில் மக்களிடம் எடுத்துக்கூற திட்டமிட்டிருந்தேன், இதற்காக புகைப்படகண்காட்சி ஒன்றை நடத்தவே முதலில் விரும்பினேன் இருப்பினும் கொரோனா பரவல் எனது முயற்சிக்கு தடையாக இருந்ததால் தற்போது இதனை புத்தகவடிவில் கொண்டு வந்திருக்கிறேன்”என்றார்.

450 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ஒருலட்சத்திற்கும் மேலான புகைப்பட தொகுப்பில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளதாக விஜய் ஜாலி குறிப்பிட்டார்.

மேலும் இப்புத்தகம் பிரதமரின் பயணங்களால் கிடைக்கும் நன்மைகளை சிறந்தவகையில் புரிந்துகொள்ள உதவும் எனவும் அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும், ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இந்தபுத்தகத்தை பரிசளிக்க விரும்புவதாக ஜாலி தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...