திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடுமுழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளை படிக்கவேண்டும் என்று மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஆண்டுதோறும் தைமாதத்தின் இரண்டாவது நாளான மாட்டுப்பொங்கல் அன்று தெய்வபுலவர் திருவள்ளுவரின் நாளாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் திருவள்ளுவரின் பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடியும் திருவள்ளுவர் தினத்தில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தமிழில் பதிவிட்ட டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு தலைவணங்குகிறேன். திருவள்ளுவரின் சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.
அவரதுலட்சியங்கள் தலைமுறைகளை கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. நாடுமுழுவதும் உள்ள இளைஞர்கள் திருக்குறளைப் படிக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என மோடி தெரிவித்துள்ளார்.
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ... |