தமிழகத்தில் 234 சட்டபேரவை தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், மாநிலப் பார்வையாளருமான சிடி.ரவி கூறினார்.
பாஜக சார்பில் திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி சக்திகேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சி.டி. ரவி பங்கேற்று தேர்தல்தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாநிலத் தலைவர் எல். முருகன், துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் சிடி ரவி கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக நடத்திய வெற்றிவேல்யாத்திரை மற்றும் நம்ம ஊர் பொங்கல் விழா பொதுமக்கள் மத்தியில் அதிகவரவேற்பு பெற்றுள்ளது. மத்திய அரசு தமிழகத்துக்கு பல கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும்.தமிழகம் முழுவதும் 234 சட்டப் பேரவை தொகுதியிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளது. வெற்றிநிலவரங்களை பொறுத்து ஏபிசி என தொகுதிகளை மூன்றாகப் பிரித்துள்ளோம். இதில் ஏ பிரிவில் உள்ள தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் அளவுக்கு பலமாக உள்ளது. பி பிரிவில் இன்னும் கட்சியை பலப்படுத்த வேண்டியுள்ளது. சி பிரிவில் பலவீனமாக உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்ட பிறகு அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ... |