காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் ராஜ்தீப்சர்தேசாய், மிரினல் பாண்டே, ஜாபர் அஹா, பரேஷ் நாத், ஆனந்த் நாத், வினோத் கே ஜோஷ் ஆகியோர் மீது போலீசார் தேசதுரோக பிரிவு, சதிசெய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்தியபேரணி வன்முறை வெடித்தது. அதில், விவசாயி ஒருவர் டிராக்டர் கவிழ்ந்து உயிரிழந்தார். ஆனால், போலீசார்சுட்டதில் விவசாயி உயிரிழந்ததாக தவறாக வெளியான தகவலை, சசிதரூர் மற்றும் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவுசெய்தனர்.
ஆனால், டிராக்டர் பேரணியின்போது டில்லி போலீசார் ஒருதுப்பாக்கி குண்டைகூட சுடவில்லை. விவசாயி டிராக்டர் கவிழ்ந்தே உயிரிழந்தார் என்பதை ஆதாரத்துடன் விளக்கமளித்து, அதுகுறித்த வீடியோவையும் வெளியிட்டனர். அந்த வீடியோவில், விவசாயிகள் சென்ற டிராக்டர் போலீசாரின் தடுப்பில் மோதிகவிழ்ந்தது. இதில், விவசாயி உயிரிழந்த காட்சிகள் பதிவாகியது. உயிரிழந்த விவசாயி பிரேத பரிசோதனையின் போதும், உடலில் எந்த வித துப்பாக்கி குண்டு காயம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, நொய்டாவை சேர்ந்த அர்பித்மிஸ்ரா என்பவர், நொய்டா போலீஸ் ஸ்டேசனில் அளித்த புகாரில் ‛‛ குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் போராட்டக்காரர் ஒருவர் மரணம்தொடர்பாக தவறான செய்தியை டுவீட்செய்த சசிதரூர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சசிதரூர், ராஜ்தீப்சர்தேசாய், மிரினல் பாண்டே, ஜாபர் அஹா, பரேஷ் நாத், ஆனந்த் நாத், வினோத் கே ஜோஷ் ஆகியோர் மீது, ஐபிசி சட்டப்பிரிவு 153ஏ, 153பி, 295ஏ, 29, 504, 505(2). 124ஏ(தேச துரோகவழக்கு) 34, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழும், தகவல் தொழில்நுட்ப சட்டம் 66வது பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானவை ஜாமினில் வெளிவரமுடியாத பிரிவுகள் ஆகும்.
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |