தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தில் தனிநபா் தகவல்கள் பாதுகாப்பில் விதிமீறல் எதுவும் நிகழவில்லை என நாடாளுமன்றத்தில் மத்தியஅரசு தெரிவித்துள்ளது.
இதுதொடா்பான கேள்விக்கு சுகாதாரத்துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் சௌபே செவ்வாய்க் கிழமை அளித்தபதில்:
கடந்த ஆண்டு பிரதமா் நரேந்திரமோடி தனது சுதந்திர தின உரையில் தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை அறிவித்தாா். அந்த திட்டத்தின் படி, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் டிஜிட்டல் சுகாதார அட்டை இலவசமாக வழங்கப்படும். அந்த அட்டையில், சம்பந்தப்பட்ட நபரின் சுகாதாரவிவரங்கள் டிஜிட்டல் வடிவில் இடம் பெற்றிருக்கும்.
இந்ததிட்டம், சோதனை முறையில் அந்தமான்-நிகோபாா் தீவுகள், சண்டீகா், தத்ரா-நகா் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்த பட்டுள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 21-ஆம் தேதிவரை, 6,30,478 சுகாதார அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அட்டைகளில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள், தனி சேமிப்பகங்களில் பாதுகாக்கப்படும்.மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நேரங்களில், சம்பந்தப்பட்ட நபரின் ஒப்புதலுடன் மட்டுமே தேசியசுகாதார அட்டைகளில் இடம்பெற்றுள்ள விவரங்கள் பயன்பாட்டுக்கு எடுத்து கொள்ளப்படும். இதில், தனிநபா் தகவல் பாதுகாப்பில் விதிமீறல் எதுவும் நிகழவில்லை.
கரோனா தடுப்பூசி திட்டம், கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக, முன்கள பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தபடுகிறது.
நாடு முழுவதும் மத்திய அரசு, மாநிலஅரசு மற்றும் தனியாா் துறையில் பணியாற்றும் 92.6 லட்சம் மருத்துவா்கள், செவிலியா்கள், ஆய்வக உதவியாளா்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்க பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் 5,32,605 போ், கேரளத்தில் 4,07,016 போ், தில்லியில் 2,78,343 போ், ஆந்திரத்தில் 4,38,990 போ், கா்நாடகத்தில் 7,73,362 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் .
தடுப்பூசியால் கடுமையான பாதிப்பு ஏற்படவில்லை:கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக, மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு புகாா் எதுவும் வரவில்லை .
அவசர பயன்பாட்டுக்காக, கோவிஷீல்ட், கோவேக்ஸின் ஆகிய தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசிகளை போட்டுக்கொண்டதால் தலைவலி, குளிா், காய்ச்சல், மயக்கம், தடுப்பூசி போடப்பட்ட இடத்தில் வீக்கம் அல்லது தோல் சிவப்படைதல் போன்ற பொதுவானபிரச்னைகளே ஏற்பட்டன. கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதாக மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்புக்கு இதுவரை புகாா் எதுவும் வரவில்லை.
2019-ஆம் ஆண்டின் புதியமருந்து பரிசோதனை விதிகளின்படி, ஒருமருந்தை பயன்படுத்தும்போது ஏதேனும் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், மருந்து தயாரிப்பு நிறுவனமே அதற்கு முழுபொறுப்பேற்க வேண்டும் என்றாா் அவா்.
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |