நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொருவரும் உறுதியேற்கவேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக காந்தியடிகள் 1922ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்த போது, உத்தரப்பிரதேசத்தின் சவுரி சவுராவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் காவல்நிலையத்தை தீவைத்துகொளுத்தினர். இதில் விவசாயிகள் மூவரும், காவல் துறையினர் 23 பேரும் உயிரிழந்தனர்.
இந்நிகழ்வின் நூற்றாண்டையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் பங்கேற்று உரையாற்றினார். வேளாண்மையை லாபமுள்ள தொழிலாகவும், விவசாயிகளைத் தன்னிறைவு பெற்றவர்களாகவும் மாற்ற அரசு பாடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். நாட்டின் அடிப்படையாக திகழ்பவர்கள் விவசாயிகள் என்றும், சவுரிசவுரா நிகழ்வில் விவசாயிகளின் பங்கு மிகப் பெரியது என்றும் தெரிவித்தார்.
கொரோனா சூழலிலும் விவசாயிகள் அதிகளவு தானிய விளைச்சல் கண்டு சாதனை படைத்ததை நினைவுகூர்ந்தார். பட்ஜெட்டில் எளியமனிதரை பாதிக்காத வகையில் வரி உயர்த்தப்பட வில்லை என்றும், நலவாழ்வு, உட்கட்டமைப்பு, விவசாயிகள் நலன் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |