அதிமுக – பாஜக கூட்டணியால் தமிழகம் முன்னேற்றம் அடையும்

அதிமுக – பாஜக கூட்டணியால் தமிழகம் முன்னேற்றம் அடையும் என மத்திய அமைச்சர் விகே.சிங் தெரிவித்தார்.

மத்தியசாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளருமான வி.கே.சிங், மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின்பட்ஜெட் கரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை மீட்டெடுக்கும் வகையில் தயாரிக்கப் பட்டுள்ளது.

பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு வருமான வரிச்சலுகை உள்பட எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்கிறார்கள். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் தனிநபர்களுக்கு தானாகவே பலன் கிடைக்கும்.

இந்த பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்புவசதி, தொழில்துறை, சுகாதாரத்துறை, பாதுகாப்பு, பெண்கள்நலன் உள்பட அனைத்து துறையினருக்கும் கடந்த ஆண்டுகளைவிட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பதால் எல்ஐசி மேம்படும்.

இந்தியா- இலங்கை இடையே ஏற்பட்ட கச்சத் தீவு ஒப்பந்தம் தற்போதும் தொடர்கிறது. இலங்கை அரசு இந்தியாவுடன் நட்புடன் உள்ளது. இந்தியாவின் முதலீடுகளை ஏற்றுக் கொள்கிறது. கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு ஆராய்ந்துவருகிறது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தற்போது குறைந்துள்ளது. சிலமீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாலும், எல்லைதண்டி மீன்பிடிப்பதாலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இருப்பினும் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு சமூகதீர்வு காணப்படுகிறது.இந்திய – சீனா எல்லைவரைபடம் தவறுதலாக வடிவமைக்கபட்டுள்ளது. இருநாடுகளின் எல்லை சரியாக வரையறை செய்யப்படவில்லை. சீனா பலமுறை இந்தியாவுக்குள் ஊடுறுவி உள்ளது.

சீனா 5 முறை இந்திய எல்லைக்குள் ஊடுறுவினால் இந்தியா 50 முறை சீனா எல்லைக்குள் ஊடுறுவியுள்ளது. ஆனால் இதை நாங்கள் வெளியில் சொல்வதில்லை.

சீனாவில் எல்லைமீறலை தடுக்க அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறோம். சீனாவின் செயலிகளுக்கு தடைவிதிப்பது, பொருட்களை வாங்க மறுப்பது போன்று சீனா மீது பொருளாதார ரீதியான தாக்குதலை செய்துவருகிறோம்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக உள்ளது. தமிழகத்திலும் அதேநிலை தொடர்ந்தால் மாநிலத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

தமிழகத்தில் அதிகளவில் சாலைப்பணிகள் நிறைவேற்றப் பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் அதிகளவில் சுங்ககட்டண வசூல் மையங்கள் செயல்படுகின்றன.

இவ்வாறு வி.கே.சிங் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க ...

சாலைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் -நிதின் கட்கரி “யாராவது பான் மசாலா சாப்பிட்டுவிட்டு சாலையில் துப்புவதை பார்த்தால், ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரி ...

மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்காசியா போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இன்று பாதுகாப்பு ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூல ...

தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியா பிரகாசிக்கும் -மோடி பெருமிதம் 'தூய்மை இந்தியா திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ ...

காங்கிரசை ஆதரிக்கும் பாகிஸ்தா ...

காங்கிரசை ஆதரிக்கும் பாகிஸ்தான் அரசு -பிரதமர் மோடி சாடல் '' காங்கிரஸ் ஒரு ஏமாற்றுக் கட்சி. அதனை பாகிஸ்தான் ...

ஜனநாயகம் எங்கே உள்ளது தமிழிசை க ...

ஜனநாயகம் எங்கே உள்ளது தமிழிசை கேள்வி உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டும் என வலியுறுத்தும்படி, கூட்டணிக் ...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் ...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில் பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமருடன் ஆலோசனை லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ...

மருத்துவ செய்திகள்

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.