வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசபக்தர்கள் வெல்லவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
1998 பிப்ரவரி 14-ம்தேதி கோவையில் நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நேற்றுநடைபெற்றது. இதில், பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.
இந்தநிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது: இந்து, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக திமுக,கம்யூனிஸ்ட்கள் செயல்படுகின்றன. பிரதமரையும், இந்து கடவுள்களையும் கொச்சைப்படுத்துபவர்கள் மீது புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட்தேர்வு கொண்டுவரப்பட்டது திமுக-காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கமும் அவர்கள் ஆட்சியில்தான் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கைபார்த்தது திமுக. எனவே, திமுக, திக-வின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டும்.
வெற்றிவேல் யாத்திரைக்குக் கிடைத்தஆதரவு, ஸ்டாலினை வேல் ஏந்த வைத்திருக்கிறது. எனவே, தேர்தலுக்காக வேஷம் போட்டுள்ளவர்களின் போலிமுகத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தேசபக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல். இதில் தேசபக்தர்கள் வெல்லவேண்டும். இவ்வாறு அவர்பேசினார்.
இந்தநிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, கேரள இந்து ஐக்கியவேதி மாநிலத் தலைவர் கே.பி.சசிகலா டீச்சர், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பேரூர்நொய்யல் ஆற்றங்கரையில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புகள் சார்பில் திதி கொடுத்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |