வேளாண்துறையில் சீர்திருத்தங்கள் செய்தமைக்கும், கரோனா வைரஸ்பரவலை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி கையாண்டதற்கும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து, பாஜகவின் புதியதேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட தேசியளவிலான நிர்வாகிகள் கூட்டம் முதல் முறையால டெல்லியில் உள்ள என்டிஎம்சி அரங்கில் நடந்தது. இதில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக்கூட்டத்துக்கு பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தலைமை தாங்கினார்.
இந்தக்கூட்டத்தில் பாஜக தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள், பொதுச் செயலாளர்கள், மாநில இணைப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விவரங்கள்குறித்து பாஜக தேசிய பொதுச்செயலாளர் அர்ஜுன் சிங் கூறுகையில் ” பிரதமர் மோடி பேச்சின்போது, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், ஆத்மநிர்பார் திட்டம், வேளாண்சட்டங்கள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.” எனத் தெரிவித்தார்.
பாஜக துணைத்தலைவர் ராமன் சிங் பேசுகையில் ” அடுத்துவரும் அசாம், தமிழகம், கேரளா, மே.வங்கம், புதுச்சேரி ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறும் என நம்புகிறோம். குறிப்பாக அசாமிலும், மே.வங்கத்திலும் பாஜக ஆட்சிஅமைக்கும் என்று நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
கரோனா காலத்தில் பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள், தற்சார்பு இந்தியா திட்டத்துக்கு பாராட்டுத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவந்தற்கு பிரதமர் மோடிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
வேளாண் சட்டங்களை பாஜக வரவேற்கிறது. இந்தபோராட்டம் அரசியல் ரீதியாக நடத்தப்படுகிறது. உண்மையான விவசாயிகள் வேளாண் சட்டங்களால் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
பல்வேறு மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு வரவேற்பு இருக்கிறது எனகூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினையில் பிரதமர் மோடி அரசின் செயல்பாடும், கையாண்ட விதம் குறித்து பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாஜக நிர்வாகிகள், புதிய வேளாண் சட்டங்களின் பலன்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார் ” எனத் தெரிவித்தார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |