பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும்

மத்திய அரசுநடவடிக்கையால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், பாஜக இளைஞரணி சார்பில், தாமரை இளைஞர்கள் சங்கமம் எனும் மாநிலமாநாடு, நடந்தது. இதற்காக, தமிழக சட்டப்பேரவை அலுவலக தோற்றத்தில், மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்தமாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்;- அதிமுக, பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் சட்டப்பேரவைக்குள் நுழையவேண்டும். ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஜல் ஜீவன் திட்டத்தில் 3 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புதரப்பட்டுள்ளது.

நாட்டினை நிர்மாப்பதற்காக பாஜக அரசியல் நடத்துகிறது. மத்திய அரசு நடவடிக்கையால் அடுத்தநிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தில் இருக்கும். நாட்டிற்கு அந்நிய முதலீடு அதிகளவில் வந்துகொண்டிருக்கிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக விவசாய கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.

சேலம் சென்னை விரைவுசாலை திட்டப்பணிகள் 2021-2022ல் தொடங்கப்படும். இந்திய அளவிலான 2 ராணுவ தளவாட வழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. கொரோனாவால் சுகாதாரம் மட்டுமல்ல, பொருளாதாரமும் கெட்டுவிட்டது.

வாஜ்பாய் தலைமையில் முதலில் ஆட்சி அமைத்தபோது ஆதரித்த ஜெயலலிதாவை ஒருபோதும் பா.ஜ.க. மறக்காது. உலகின் மிகப்பழமையான மொழியான, அனைத்து மொழிகளுக்கும் தாயாக உள்ள தமிழைநேசிக்கிறேன். தமிழ் முனிவர்கள் பிறந்தமண்ணை மிகவும் நேசிக்கிறேன். சேலத்தில் மாம்பழம், மரவள்ளிக்கிழங்கு போல மோடிஇட்லி பிரசித்திப் பெற்று வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்திச் செய்யப்படும்.

‘ நாட்டிற்கு அந்நியமுதலீடு அதிகளவில் வந்துக் கொண்டிருக்கிறது; பங்குச்சந்தையும் வேகமாக வளர்கிறது. விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக விவசாய கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படுகின்றன. சேலம்- சென்னை விரைவு சாலைத் திட்டப்பணிகள் 2021- 2022 ல் தொடங்கப்படும். இந்திய அளவிலான இரண்டு ராணுவ தளவாடவழித்தடத்தில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றவேண்டும் என்பதே பா.ஜ.க.வின் நோக்கம். உடலில் உயிர் இருக்கும்வரை ஒரு இன்ச் நிலத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம். சீனாவுடன் ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு பிறகு நமக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.

 

என கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ...

தேசத்தைக் கட்டியெழுப்புவதில்  முயற்சிகளில் உறுதியான பங்காளியாக இருந்தார் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ...

பிறப்பின் அடிப்படையில் திமுக த ...

பிறப்பின் அடிப்படையில் திமுக தலைமை நவீன தீண்டாமை தெலுங்கர்கள் பற்றி சர்ச்சையாகபேசிய கஸ்தூரிக்கு திமுக எம்பி ஆ ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுக ...

இந்தியா – சவூதி அரேபியா உறவுகளை வலுப்படுத்தும் வெற்றிகரமான பயணத்தை பியுஷ் கோயல் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமா ...

இந்திய பொருளாதார நிபுணர் காலமானார் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவரும், இந்தியப் பொருளாதார நிபுணருமான ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோ ...

சொல்வது எளிது செய்வது கடினம் மோடி காங்கிரசை சாடல் உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை அளிப்பது எளிது. ஆனால், அதனை ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முத ...

தீபாவளி வாழ்த்து சொல்வதில் முதலமைச்சருக்கு என்ன தயக்கம் L. முருகன் கேள்வி தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தயக்கம்? ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

அரத்தையின் மருத்துவக் குணம்

இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ...