தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும்

தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்துறை அமைச்சர் ராம்தாஸ் அதாவ்லே தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் சசிகலா, தினகரனும் இணையவேண்டும் என்று கூறினார்.

நேற்று தமிழக சமூக நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் அவர் கூறியதாவது:

மத்திய அரசின், ‘ஜன் தன்’ திட்டத்தில், இதுவரை, 41.79 கோடி வங்கி கணக்கு துவக்கப்பட்டு, ஒருலட்சத்து, 37 ஆயிரத்து, 426 கோடி ரூபாய் வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் மட்டும், 1.11 கோடி வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு, 2,865 கோடி ரூபாய் வங்கியில் உள்ளது. இதேபோல, இலவச காஸ் வழங்கும் திட்டத்தில், எட்டு கோடிக்கும் அதிகமான இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில், அ.தி.மு.க., சிறப்பான ஆட்சி நடத்துகிறது. தமிழகசட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன், பா.ஜ., கூட்டணி வைக்கிறது. இந்த கூட்டணி வெற்றிபெறும்; முன்னாள் முதல்வர் ஜெ.,யின் கனவு நிச்சயம் நிறைவேறும். தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்குவங்கம் மாநிலங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி கண்டிப்பாக ஆட்சி அமைக்கும். அதிமுக.,வுடன் சசிகலா, தினகரன் இணைய வேண்டும்.

விவசாயிகளின் வருவாயை உயர்த்தவே, மத்திய அரசு, மூன்று வேளாண் சட்டங்களை இயற்றி உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களின் போராட்டத்தை, உடனடியாக கைவிடவேண்டும். தேவைக்கேற்ப இந்த சட்டங்களில் திருத்தம் செய்ய, மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கு விவசாயிகள் ஒத்துழைப்பு தந்து, ஆலோசனை நடத்த முன்வர வேண்டும். இந்த ஆண்டு, மக்கள்தொகை கணக்கெடுப்பை, ஜாதி வாரியாக நடத்த வேண்டும் என, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...