கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பாஜக முன்னாள்தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:
2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.35.71 என இருந்த பெட்ரோல்விலை, அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2014-ல், காங்கிரஸ் ஆட்சிமுடிந்து, பாஜக அரசு பொறுப்பேற்றபோது ரூ.74.71 ஆக உயர்ந்து இருந்தது.
தற்போது பாஜக ஆட்சியில், கடந்த 7 ஆண்டுகளில் ரூ.18 உயர்ந்து லிட்டருக்கு ரூ.92-க்கு விற்பனையாகிறது. ஆனால், காங்கிரஸ்ஆட்சியில் 10 ஆண்டுகளில் லிட்டருக்கு ரூ.39 உயர்ந்திருந்தது.
அதேபோல, 2004-ல் காங்கிரஸ் கட்சியில் ரூ.266 ஆக இருந்த காஸ்சிலிண்டர் விலை, 10 ஆண்டுகளில், அதாவது 2014-ல் ரூ.920 ஆக உயர்ந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.140 விலை குறைந்து ரூ.780-க்கு விற்கப்படுகிறது. உற்பத்திவிலையை கருத்தில் கொண்டு பெட்ரோல், காஸ் விலையை உயர்த்தவேண்டிய கட்டாயம் உள்ளது.
அப்போது இருந்ததைவிட இப்போது காஸ்சிலிண்டர் விலை குறைவுதான். விலை உயர்வு என இப்படி மு.க.ஸ்டாலின் பொய் பேசிவருவதால் அவரை புழுகுமூட்டை என மக்கள் நினைக்கிறார்கள்.
எனவே மக்கள் திமுக- காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிக்கவேண்டும். காங்கிரஸ் கட்சியின் பாவத்தின் சுமை தாங்காமல்தான் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்துள்ளது என்றார்.
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |