மம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் பாஜக தீவிரம்

மே.வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை ஆட்சியிலிருந்து அகற்றுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதனால் மே.வங்கத்தில் அக்கட்சியின் தேர்தல்பிரச்சாரம் முன்கூட்டியே சூடுபிடித்துள்ளது.

மார்ச் 27-ல் தொடங்கி 8 கட்டங்களாக நடைபெறும் மே.வங்கதேர்தல் அறிவிப்புக்கு பிறகு பாஜக தேசிய தலைவர்களின் பிரச்சாரக் கூட்டம் திட்டமிடப்பட்டு வருகிறது. குறைந்த பட்சம் 800 கூட்டங்கள் நடத்த பாஜக முடிவுசெய்துள்ளது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 7 ல் தொடங்கி 20 கூட்டங்களில் கலந்துகொண்டு பேசுகிறார். மத்தியஅமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசியதலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் தலா 60 கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பாஜகவின் பிற தேசிய தலைவர்களின் கூட்ட எண்ணிக்கை 700-க்கும் அதிகமாக திட்டமிடபட்டுள்ளது.

இதுகுறித்து  பாஜக தேசியநிர்வாகிகள் வட்டாரத்தில் கூறும்போது, “மேற்கு வங்க வெற்றியின் மூலம் இந்திபேசாத மாநிலங்களில் எங்கள் கட்சியின் முதல் வெற்றியாக அது அமையும். எனவே, பிரதமர் மோடி உட்பட அனைவருமே தேவைக்கு ஏற்ப கூட்ட எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக உள்ளனர். இதற்காக பாஜக ஆளும் மாநிலங்களில் இருந்தும் தொண்டர்களை அழைக்கஉள்ளோம்” என்று தெரிவித்தனர்.

தற்போது தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களும் இந்திபேசாத மாநிலங்கள் ஆகும். அசாம் தவிர மற்ற நான்கிலும் பாஜக ஆட்சி செய்ததில்லை. எனவே, இந்த 5 மாநில தேர்தல் பாஜகவுக்கு பெரும்சவாலாக உள்ளது.

அசாமில் 2-வது முறையாக பாஜகவை ஆட்சியில் அமர்த்த பிரதமர் மோடி 7 கூட்டங்களில் கலந்து கொள்கிறார். மற்ற 3 மாநிலங்களான தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரேநாளில் மூன்று கூட்டங்கள் நடத்தும் திட்டத்துடன் 5-க்கும் மேற்பட்டமுறை பயணம் மேற்கொள்கிறார் மோடி.

பாஜக ஆளும் மாநில முதல்வர்களும் 5 மாநிலங்களில் பிரச்சாரம்செய்ய உள்ளனர். இதில் உ.பி.முதல்வரான யோகி ஆதித்யநாத் அதிககூட்டங்களில் கலந்து கொள்கிறார். இவர் முதல்முறையாக தமிழக தேர்தல் பிரச்சாரத்திலும் கலந்துகொள்ள திட்டமிடப்படுகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

தும்பையின் மருத்துவக் குணம்

தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...