கன்னியாகுமரி மக்களவைதொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக தலைமை இன்றுஅறிவித்துள்ளது.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் எச். வசந்த்குமார் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், உடல்நலக்குறைவு காரணமாக 2020 – ஆகஸ்ட் 28-ம் தேதி வசந்த்குமார் உயிரிழந்தார். இதனையடுத்து, கன்னியாகுமரி மக்களவைதொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல்-6-ம் தேதி நடைபெறும் என்று இந்தியத்தேர்தல் ஆணையம் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அறிவித்தது.
அதிமுகவுடன் தேர்தல் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி உள்ளதால், சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதிபங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இன்று அதிகாலை, 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சட்டமன்ற தொகுதிகளும், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாஜக தலைமை அறிவித்துள்ளது.
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |