பா.ஜ., அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை புதியது போல் திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2006ல் விவசாயிகளுக்கு 2 ஏக்கர்நிலம் வழங்கப்படும் என கொடுத்த வாக்குறுதியை திமுக நிறைவேற்றியதா? பெண்களுக்கான நகைக்கடன்ரத்து என 2019 லோக்சபா தேர்தலில் ஸ்டாலின் கொடுத்தவாக்குறுதி என்ன ஆனது? நாடுமுழுவதும் கிராமம், நகரங்களில் வீடு கட்டித்தரும் திட்டத்தையும் பா.ஜ., அரசு செயல்படுத்தி வருகிறது. ஏழைபெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. கிராமங்களை இணையதளம் மூலம் இணைக்கும் பாரத்நெட்திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடுக்க மத்திய அரசு ரூ.1.25 கோடி ஒதுக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது. அதேபோல், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். மத்திய பா.ஜ., அரசு, வேளாண்சட்டத்தை கொண்டுவந்ததே அதற்காக தான். அப்போது எதிர்த்துவிட்டு இப்போது தொலைநோக்கு திட்டமாக கூறுகிறார். இதுபோன்று பா.ஜ., செயல்படுத்திவரும் திட்டங்களை புதியதுபோல் தொலைநோக்கு திட்டம் என அறிவித்து ஸ்டாலின் ஏமாற்றுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |