திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் அறிக்கையில் கொடுத்திருந்த வாக்குறுதிகளான நீட் தேர்வுரத்து, பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்கு மாத உரிமைதொகை போன்றவற்றை நிறைவேற்றவில்லை என எதிர்க் கட்சியான அதிமுக இன்று தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவின் அண்ணாமலை ”பெட்ரோல், டீசல்விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராகஉள்ளது. இதையே தமிழக நிதியமைச்சர் சொல்வாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீனவர் விரோத செயல்களைக் கண்டித்து நாளைமறுநாள் பாஜக மீனவர் அணி தலைமையிலும், விவசாயிகளுக்கு எதிரான செயல்பாடுகளைக் கண்டித்துவரும் ஆகஸ்ட் மாதத்திலும் போராட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”பெட்ரோல், டீசல்விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க் கட்சியாக திமுக இருந்தபோது சொன்னதை தற்பொழுது சொல்லத்தயாரா. இதையே தற்போதைய தமிழக நிதியமைச்சர் சொல்வாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |