ஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க சார்பில் திருச்சியில் மாபெரும்பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்ட பேரவை தேர்தலுக்கு தயார்படுத்திக் கொள்ள கூட்டிய கூட்டம் என்பதால் லட்சக்கணக்கான தி.மு.கவினர் பொதுக்கூட்டதில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திமுக அடுத்த 10 ஆண்டுகள் செய்யக்கூடிய திட்டங்களை ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார். அதில், ஏழுமுக்கிய துறைகளில் நடைமுறைப்படுத்த உள்ள திட்டங்கள் குறித்தும் ஸ்டாலின் விளக்கமாக எடுத்துரைத்தார். ஸ்டாலின் தெரிவித்த திட்டங்கள் மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே வெளியிட்டதிட்டங்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் வெளியிட்ட இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000ரூ ஊதியம் என்பதை “நான்தாரேன் ஆயிரம்” என்றும், 50 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு என்பதை ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றும், 1 கோடிபேரை வறுமைக்கோட்டுக்கு மேல்கொண்டு வருவோம் என்பதை, செயல்கோட்டிற்கு மேல் கொண்டுவருவோம் என்றும், டிஜிட்டல் தற்சார்பு கிராமங்கள் என்பதை பிராட்பேண்ட் (broadband) என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளதாக மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.

ஸ்டாலின் தெரிவித்த உறுதி மொழிகள் அனைத்தும் காப்பி அடிக்கப்பட்டது

என்றும் “ஸ்டாலின் அவர்களுக்கும் நாங்கள் தான் சொல்லி கொடுக்கிறோம், நாமே தீர்வு என்று நாங்கள் சொன்னால், ஒன்றிணைவோம் வா என்று சத்தமில்லாமல் மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வருகிறது என்று கமல்ஹாசன் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மேடை அமைத்து பிரச்சாரம்மேற்கொண்ட ஸ்டாலின், அந்த மேடையின் அளவு, அமர வேண்டிய இடம், இருக்கைகள், அக்கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் யார், பேச வேண்டிய அம்சங்கள் என்ன, யாரையெல்லாம் பாராட்டவேண்டும் என்று திட்டமிட்டு செயல் படுத்தினார். ஆனால், மக்கள் பிரச்சனைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறியாதது அக்கட்சியின் 50 ஆண்டுகால அரசியலை கேள்வி குறியாக்கியுள்ளது.

ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சமுதாயத்தினர் இருக்கிறார்கள், அவர்களின் ஓட்டுவங்கி எவ்வளவு என அலசி ஆராய்ந்த ஸ்டாலின் மக்கள் பிரச்சனைகளை குறித்து அறியாமல் ஊர்ஊரக சென்று கோரிக்கை மனுக்களை பெற்றும், மூன்றாவது அணிவெளியிட்ட நலத்திட்டங்களை ஸ்டாலினும் வெளியிட்டது ஸ்டாலினின் மிகப் பெரிய தேர்தல் சொதப்பல் என்று தி.மு.கவினரே நொந்தபடி தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...