மத்திய, மாநில அரசுகள் இணையும்போது நிச்சயமாக நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும்

தாராபுரம் தனிதொகுதியின் வளர்ச்சியில் தனிக் கவனம் செலுத்தப்படும் என்று அத்தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தனிதொகுதியானது அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்தத்தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். இந்தநிலையில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் அமராவதி சிலை அருகே அவருக்கு கூட்டணிக்கட்சி நிர்வாகிகளின் சார்பில் திங்கள்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, புறவழிச் சாலையில் உள்ள தாராபுரம் சட்டப்பேரவை தொகுதி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல்பணிமனையை எல்.முருகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகளிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். இதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய, மாநில அரசும் இணையும்போது நிச்சயமாக நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். இதற்கு உதரணமாகத்தான் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை-கொல்லம் தேசியநெடுஞ்சாலை திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும்போது இந்த ஊரின் வளர்சியைக் கருத்தில்கொள்ள முடியும். இந்தப் பகுதிக்குத் தேவையான மருத்துவக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி கொண்டுவரமுடியும். அதேபோல, கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்களை துரிதப்படுத்திக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். விதைப் பண்ணை மிகிவும் முக்கியமானதாகும். தாராபுரம் நெல் விதைகளைக் கொடுக்கும் ஊராக உள்ளது. ஆகவே, நொல்விதைகளை இந்தியா முழுவதும் கொடுப்பதற்காக சிறப்பு பொருளாதார மண்டலத்தை கொண்டு வரமுடியும். தாராபுரத்தின் மேம்பாடு, வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டும் எங்களது பணிகள் இருக்கும் என்றார். இந்த சந்திப்பின் போது, அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள் உடனிருந்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...