12 அடி உயர ஆதி சங்கராச் சாரியார் சிலையை திறந்த பிரதமர்

உத்தரகண்டின் கேதார்நாத் கோவில் அருகே 12 அடிஉயர ஆதி சங்கராச் சாரியார் சிலையை திறந்த பிரதமர் நரேந்திர மோடி, முன்னதாக அங்கு ஆரத்தி எடுத்து சிறப்புபூஜை செய்து வழிப்பட்டார்.

உத்தரகண்டில் 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தின்போது கேதார்நாத் கோவில் சேதம்அடைந்தது. கோவில் அருகே இருந்த ஆதி சங்கராச் சாரியார் சமாதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோவில் மற்றும் சமாதியை புணரமைக்கும் பணியை 500 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகள் செய்துவருகின்றன.

கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயரமும், 35 டன் எடையும் உடைய ஆதிசங்கரரின் கற்சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி யோகி ராஜ் செதுக்கி உள்ளார்.

இந்த சிலை உருவாக்கத்திற்காக 120 டன் கல் கொண்டுவரப்பட்டு, 2020 செப்டம்பரில் சிலை செதுக்கும்பணி துவங்கியது. ஆதி சங்கரரின் அமர்ந்த நிலையிலான இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவ.,05) திறந்து வைத்தார். முன்னதாக அங்குள்ள தேவ மந்திரங்கள் முழங்கிட சிவன் மற்றும் நந்திசிலைகளுக்கு பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங் ...

பிஎம் விஸ்வகர்மா திட்டம் தொடங்கப்பட்டது பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் நேற்று ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது ...

இந்தியாவின் கலாசாரத்தின் மீது தாக்குதல் சுவாமி விவேகானந்தர், லோக்மான்ய திலகருக்கு உத்வேகம்அளித்த சனாதன தர்மத்தை ...

யாத்திரையை திசை திருப்பும் திம ...

யாத்திரையை  திசை திருப்பும் திமுக தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் "என் மண், என் ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்த ...

ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழகத்தின் சொத்து. அவரைவைத்து அரசியல் செய்யக்கூடாது ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப் ...

மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்க ...

சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் நாட்டில் சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...