பெட்ரோல், டீசல விலை படிப்படியாக குறையும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ்விலை உயர்வால் சாமானிய மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனால் எரிபொருட்கள் மீதானவரியை குறைத்து அவற்றின் விலையை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்திநிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சர்வதேச சந்தையில் எரிபொருட்கள் விலை உயர்ந்ததால், இந்தியாவும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது, ஆனால் இது தற்காலிகமானது.
அவை (எரிபொருட்கள் விலை) படிப்படியாக குறையும். விலையைகுறைக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் நாங்கள் பேசிவருகிறோம். எரிபொருட்கள் மீதான இந்தவரிகள் வளங்களாகும், பொருளாதாரத்தை புதுப்பிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உதவுகிறது குறிப்பாக கோவிட்-19 உருவாக்கிய சூழ்நிலையில். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலையைகுறைப்பது தொடர்பாக அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மாநில அரசுகளும், மத்திய அரசும் கலந்துரையாட வேண்டியவிஷயம். ஏனென்றால் பெட்ரோல் விலையில் மத்திய அரசின்வரிகள் மட்டுமல்ல, மாநில அரசுகளும் கட்டணம் வசூலிக்கின்றன. மத்திய அரசு வருவாய் பெறும்போது, அதில் 41 சதவீதம் மாநில அரசுகளுக்குசெல்கிறது என்று தெரிவித்தார்.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |