காங்கிரஸ்-திமுகவிற்கு வாரிசுஅரசியலே நோக்கம் என்றும், பாஜகவிற்கு நாட்டின் வளர்ச்சியே நோக்கம் எனவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார்.
வெற்றி வேல், வீரவேல் என தமிழில் முழக்கமிட்டு பிரதமர் மோடி தனது பிரசார உரையைத் தொடங்கினார்.
இதில் அவர் பேசியதாவது, தமிழகத்தின் மிகப்பழமையான நகரத்திற்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. ஐக்கியநாடுகள் சபையிலும் தமிழில் சில உதாரணங்களைக் கூறியதை நினைவுகூர்கிறேன். தமிழகத்தின் கலாசாரத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் பெருமைக் கொள்கிறது.
ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் லட்சியம் நான். சமுதாயத்திலுள்ள விவசாயிகள், ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் நலனுக்கான பாடுபடுவேன்.
தேவேந்திர குலவேளாளர் கோரிக்கையை நிறைவேற்றியது தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான். தாய் மொழியில் மருத்துவக் கல்வி, தொழிற்கல்வியை வழங்க மத்திய அரசு விரும்புகிறது.
காங்கிரஸ் – திமுகவை பொருத்த வரை வாரிசு அரசியல்தான் நோக்கமாக உள்ளது. திமுக, காங்கிரஸ் தலைமைகள் தங்களது நிர்வாகிகளை கட்டுப் படுத்தி வைக்கவேண்டும்.
தமிழக முதல்வரின் தாயாரை திமுக பிரமுகர் அவமதித்துள்ளார். பெண்களை அவமதித்தவர்கள் மீது எந்தநடவடிக்கையும் அக்கட்சி எடுக்கவில்லை. ஒருவேளை மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திலுள்ள பெண்கள் அனைவரும் அவமதிக்கப் படுவார்கள். பெண்களை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்செல்ல அவர்களால் முடியாது.
திமுகவின் வாரிசுக்காக அக்கட்சியில் பலதலைவர்கள் புறக்கணிக்க பட்டுள்ளனர். பெண்களின் கண்ணியத்தைக் காக்க கிராமப் புறங்களில் பாஜக அரசால் பலகழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |