கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலஅரசுகள், உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என, பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தியுள்ளார்.
நாடுமுழுவதும் கொரோனா தொற்றின் 2 – வது அலை வேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை, தடுப்பது தொடர்பாக பல்வேறு மாநில, முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மற்றும் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறை, பொதுத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி,நோய்பரவல் அதிகமாக உள்ள இடங்களில், நுண்ணிய நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை கண்டறிந்து வகைப்படுத்த வேண்டும் என கேட்டுகொண்டார். கொரோனா பரவுவதை தடுக்க மீண்டும் ஒருபோரில் ஈடுபட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
தற்போது முக கவசமும் போதுமான அளவுக்கு உள்ளது என்றும், சிறிய ஊர்களில்கூட கொரோனா தடுப்பூசி கிடைத்து வருகிறது எனவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என்றும், பரிசோதனைகளை அதிகரிக்க மாநிலஅரசுகள், உடனடியாக நடவடிக்கை எடுத்திடவேண்டும் என, பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தினார்.
அகன்ற இலைகளையும், புனல் போன்ற நீண்ட மலர்களையும், முள் நிறைந்த காயையும் உடைய ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |