பாகிஸ்தான் விடுக்கும் அச்சுறுத்தல்களை எதிா்கொள்வதற்காக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்வல்லமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உளவுத்துறை தாக்கல்செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போதைய சூழலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போா்மூள வாய்ப்பில்லை. ஆனால், இரு நாடுகளுக்கிடையேயான சிக்கல்களால் பதற்றச்சூழல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் முன்பிருந்த அரசுகளைப்போல அல்லாமல், பிரதமா் மோடி தலைமையிலான அரசு பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன்கொண்டது. அதன் காரணமாக, அணுசக்தி வலிமை கொண்ட இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்தநிலை, ஜம்மு-காஷ்மீரில் தொடா்ந்து வன்முறைகளும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நிகழ வழிவகுக்கும். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புஅந்தஸ்தை கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியா ரத்துசெய்ததை தொடா்ந்து, இருநாடுகளும் தங்கள் தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தான், இராக், சிரியாவில் நடைபெற்று வரும்போரில் அமெரிக்க படைகள் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழல், சா்வதேச அமைதிக்கு சவால்விடுக்கும் வகையிலேயே உள்ளது.
ஆப்கானிஸ்தான் போரில் தலிபான்கள் அதிகபலனடைய வாய்ப்புள்ளது. தலிபான்களுக்கு எதிராக அந்நாட்டு கூட்டணி அரசு தீவிரமாக செயல்பட்டுவருகிறது. எனினும், கூட்டணி அரசுக்கான ஆதரவை சிலா் திரும்ப பெற்றால் அந்நடவடிக்கைகளில் தொய்வு ஏற்படும். இது தலிபான்களுக்கு சாதகமாக அமையக்கூடும்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல், லிபியாவில் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு, ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு பகுதிகளில் காணப்படும் பதற்றமான நிலை ஆகியவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ... |
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |