டாடா ஆக்சிஜன் இறக்குமதி மோடி பாராட்டு

கரோனா நோயாளிகளுக்கு உதவும்விதமாக வெளிநாட்டிலிருந்து 24 கிரையோஜெனிக் கன்டெய்னர்களில் ஆக்சிஜனை இறக்குமதி செய்ய டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த ஆக்சிஜன் கன்டெய்னர்களை விமானம்மூலம் விரைவாகக் கொண்டுவர இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.கிரையோஜெனிக் கன்டெய்னர்கள் என்பது இரண்டு அடுக்குகளைக்கொண்ட, உள்புறம் காற்றுமுழுவதுமாக நீக்கப்பட்ட கன்டெய்னராகும். இவற்றில் திரவ நிலையிலான ஆக்சிஜன் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்படும். இதுமைனஸ் 90 டிகிரி உறை குளிர் நிலையில் வைக்கப்படும். ஒரு கன்டெய்னரில் அதிகபட்சம் 61,620 லிட்டர் வரையான ஆக்சிஜனை கொண்டுவர முடியும்.

நாடுமுழுவதும் கரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இதில்தலைநகர் டெல்லி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பெரும்பாலும் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதனால் இம்முறை ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரமதர், இம்முறை கரோனாவைரஸ் சூறாவளியைப் போலதாக்குகிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜேஎஸ்பிஎல் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்திசெய்து சப்ளை செய்வதாக அறிவித்திருந்தன. இந்நிலையில் உடனடி தீர்வாக வெளிநாட்டிலிருந்து ஆக்சிஜனை டாடா குழுமம் இறக்குமதிசெய்து பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக டாடா குழுமம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தற்போதைய இக்கட்டான சூழலில் இறக்குமதி ஆக்சிஜன் நிலையை சீராக்க உதவும் எனசுட்டிக் காட்டியுள்ளது. இது மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்த உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே டாடா ஸ்டீல் நிறுவனத்திலிருந்து நாளொன்றுக்கு 200 டன் முதல் 300 டன் வரையான திரவஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களுக்கு சப்ளை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

டாடா குழுமம் மக்கள் நலன்சார்ந்த பணிகளுக்கு தாராளமாக உதவிசெய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. டாடா அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்களை இக்குழுமம் மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே தலைநகர் டெல்லிக்கு தேவைப்படும் ஆக்சிஜனை பிறமாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிவருவதாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் அதிகரித்த சூழலில் டாடா அறக்கட்டளை ரூ. 1,500 கோடியை பிரதமர் நலநிதிக்கு வழங்கியது.

இதுதவிர வென்டிலேட்டர்கள், பிபிஇ கருவிகள், பரிசோதனைக் கருவிகள் ஆகியவற்றை தொடர்ந்து கொள்முதல்செய்து விநியோகித்து வருகிறது. கேரள மாநிலத்தில் 6 வாரங்களில் மருத்துவ மனையையும் கட்டித்தந்தது குறிப்பிடத்தக்கது.

One response to “டாடா ஆக்சிஜன் இறக்குமதி மோடி பாராட்டு”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

கண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன?

1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...