பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம்.. திமுக அரசிடம் அறிக்கை கேளுங்க; சுப்ரமணிய சுவாமி

சென்னை கே.கே.நகர் பத்மாசேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டசம்வபம் அம்பலமானது. இதனையடுத்து அவர்மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆசிரியர் ராஜ கோபாலனை கைது செய்தனர். இந்தவிவகாரத்தில் பத்ம சேஷாத்ரி பள்ளி மீதும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்தவிவகாரம் சாதிய ரீதியாக அணுகப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இப்பள்ளி விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி களத்தில் இறங்கியுள்ளார். பத்மா சேஷாத்ரி பள்ளிவிவகாரத்தில் நியாயமான விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும் உள்நோக்கத்தோடு அரசுசெயல்படுவது தெரியவந்தால் தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை” என்று சுப்ரமணிய சுவாமி பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.

மேலும் இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவைவெளியிட்ட சுப்ரமணியசாமி, “தமிழகத்திலுள்ள ஞானி மற்றும் தியாகிகளான பிராமணர்கள் மத்தியில், எழுந்துள்ள அச்ச உணர்வுகுறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் எழுதியுள்ளேன். நாஜிபடைகள் ஜெர்மனியில் யூதர்களை குறி வைத்து, தாக்குதல் நடத்திய ஆரம்ப கால கட்டத்தை இந்த சம்பவம் நினைவுபடுத்துகிறது” என்று திமுக அரசுமீது கடும் விமர்சனத்தை சுப்ரமணிய சுவாமி வைத்திருந்தார்.

இதுதொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “திமுக ஆட்சிக்குவந்த நாட்களிலேயே குறிப்பிட்ட சமூகத்தைசேர்ந்த ஆசிரியர்கள், அர்ச்சகர்கள் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்புக்கவனம் எடுத்து, இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பிரச்னைகள் குறித்து தலைமைச் செயலாளருக்கு சம்மன் அனுப்பி, அறிக்கை தயாரித்து வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்

One response to “பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரம்.. திமுக அரசிடம் அறிக்கை கேளுங்க; சுப்ரமணிய சுவாமி”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...