கண்ணை கட்டிக்கொண்டு விசாரணை நடத்தும் விடியல் அரசு

மதமாற்றத்தின் பெயரில் சகோதரி அரியலூர் லாவண்யாவின் உயிரை பலி கொண்டது மட்டுமல்லாமல், அதை திசை திருப்ப முயலும் செயல் கண்டிக்கத்தக்கது. அன்று நீட் தேர்வில் போதுமான மதிப்பெண் பெற முடியாமல் உயிரிழந்த அரியலூர் மாணவி அனிதா விற்காக நீட் தேர்வே கூடாது, ரத்து செய்ய வேண்டும் என்று பொங்கிய திருமாவளவன், தற்போதைய தமிழக முதல்வர் மற்றும் கூட்டணி கட்சியினர், இன்று அரியலூர் லாவண்யாவிற்காக மதமாற்றம் கூடாது என்பார்களா, மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு ஆதரவு தான் தருவார்களா எல்லாம் வேஷதாரிகள்.

சிறுவயதிலேயே தாயை இழந்த லாவண்யா நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக அருகில் உள்ள கிறிஸ்தவ பள்ளியிலே சேர்க்கப்படுகிறார். அந்தப் பள்ளி கல்வியுடன் மத மாற்றத்தையும் சேர்த்தே போதித்துள்ளது. பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்த லாவண்யா இன்னும் சில வருடம் தானே கடந்து விடுவோம் என்ற நம்பிக்கையில் காலத்தைக் கடக்க, காலம் கடப்பதற்குள் அவளை மதம் மாற்றி விடவேண்டும் என்று பள்ளி நிர்வாகம் துடிக்க, இறுதியில் பொறுமை இழந்த காலன் அவளை பற்றிக்கொண்டது என்பதே நிதர்சனம். அதாவது கொடுமை தாங்காமல் பூச்சி மருந்து குடித்து தன்னை மாய்த்துக் கொண்டுள்ளாள்.

இதற்கு அவர் இறப்பதற்கு முன் பதிவு செய்த காணொளியே சான்று. அவள் பெற்றோரும் இதை உறுதி செய்துள்ளனர். மேலும் இது ஊர் சொல்லி தான் தெரிய வேண்டும் என்றில்லை. காலம் காலமாக கல்வி என்ற போர்வையில் மதமாற்றம் நடைபெறுவதும், பல சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர்களை தங்கள் மத அடையாளங்களை துறக்க கட்டாயப்படுத்துவதும், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளே தங்கள் நம்பிக்கைகளையும், அடையாளங்களையும் சுமக்க வலியுறுத்துவதும் நாடே அறிந்த ஒன்றுதான்.

2006 ஆம் ஆண்டு பாத்திமா கத்தோலிக்க பள்ளியில் பயின்ற ஓமலூர் சுகன்யா தற்கொலையாகட்டும், 2009ஆம் ஆண்டு பைபிளை சரியாக படிக்க தெரியாததால் அவமானத்துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொண்ட 12 வயது ரஞ்சிதாவாகட்டும், அதே ஆண்டு சென்னை அம்பத்தூர் இம்மானுல் மெத்தடிஸ்ட் பள்ளி ரம்யா தற்கொலையாகட்டும் எத்தனையோ உதாரணங்களை கூறலாம். இந்த வரிசையில் தான் தற்போது லாவண்யாவும் சேர்ந்துள்ளாள்.

ஒதுக்கப்பட்ட சமூகத்தின் சமூக நீதிக்காக தன வாழ்நாளை அர்ப்பணித்த சுவாமி சகஜானந்தா, தனது பள்ளிக்காலத்தில் தான் படித்த திண்டிவனம் சிகாமணி பள்ளி தன்னை மதம் மாற வலியுறுத்தியதையும், மறுத்த தன்னை, தனது வறுமை தெரிந்தும் முழு கட்டணத்தையும் செலுத்த நெருக்கடிக்கு உள்ளாக்கியதையும், வேறுவழியின்றி பள்ளிப்படிப்பை பாதியிலேயே துறந்ததையும் ஒருமுறை கூறியுள்ளார். அது 1900 ஆம் ஆண்டைய காலக்கட்டம் என்றாலும், அது 100 ஆண்டுகளை கடந்தும் தொடர்வதும். வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை பெற்று 75 ஆண்டுகளை கடந்து விட்ட பின்பும் அதே சூழல் நிலவுவதும் வேதனையான ஒன்று. காரணம் வாக்கு வங்கி அரசியலுக்கு அடிமையாகி போன அரசியல் வர்க்கமும், அவர்கள் இட்ட பணிக்கு கைகட்டி வேலை பார்க்கும் அதிகார வர்க்கமுமே. இல்லாவிடில் கண்ணுக்கு எட்டிய தூரம் ஆதாரம் இருந்தும் கண்ணை கட்டிக்கொண்டு குற்றவாளிகளை தேடுமா காவல் துறையும், அதன் விடியல் அரசும். இதற்குத்தான் பாஜக வேண்டும் என்கிறது சிபிஐ விசாரணை.

நன்றி; தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா-வின் 13-வது கெம் கண்காட் ...

இந்தியா-வின் 13-வது  கெம் கண்காட்சியை ஜே பி நட்டா தொடங்கிவைத்தார் மத்திய ரசாயனம், உரத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் ...

பத்மஸ்ரீ கமலா பூஜாரி மறைவிற்கு ...

பத்மஸ்ரீ கமலா பூஜாரி மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரி மறைவிற்குப் பிரதமர் ...

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கி ...

நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் – சிவராஜ் சௌகான் நூல்கள் நமது ஜனநாயகத்திற்கு கிடைத்த களஞ்சியங்கள் என ஜனாதிபதி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பி ...

காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் -பிரதமர் மோடி ஆலோசனை காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ...

தூத்துக்குடி-மேட்டுப்பாளையம் ரயில் சேவை L -முருகன் தொடங்கிவைத்தார் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் இடையே புதிதாக வாரம் இரு முறை ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்த ...

இந்தியா -மலேசியா இருதரப்பு ஒத்துழைப்பை வேளாண்மை துறையில் அதிகரிக்க முடிவு இந்தியா, மலேசியா ஆகிய இருநாடுகளும், வேளாண்மை துறையில் குறிப்பாக, ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...