உ.பி., பிரியும் வாக்குகள் பலம் பெரும் பாஜக

உத்தரப் பிரதேத்தின் 2022 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட பிஹாரின் கட்சிகளும் தயாராகிவருகின்றன. இதனால், அம்மாநில எதிர்கட்சிகளின் வாக்குகள்பிரியும் நிலை உருவாகி உள்ளது.

பாஜக ஆளும் உ.பி.யில் அடுத்தவருடம் துவக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட பிஹாரின் அரசியல்கட்சிகளும் போட்டியிடத் தயாராகி வருகின்றன.

இம்மாநிலத்தில் பூர்வாஞ்சல் என்றழைக்கப்படும் கிழக்குப் பகுதி பிஹாரின் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு பிஹாரின் சமூகங்களும் அம்மாநிலமொழியான போஜ்புரி பேசுபவர்களும் அதிகமாக வாழ்கின்றனர்.

இதனால், அம்மக்கள் இடையே பிஹாரின் கட்சிகளுக்கு சிறிதுசெல்வாக்கு உண்டு. இச்சூழலை பயன்படுத்தி பிஹாரின் கட்சிகள் உ.பி.யின் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடத் தயாராகிவருகின்றன.

பிஹாரில் பாஜக ஆதரவுடன் ஆளும் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), அதன் கூட்டணிகளான விகாஸ் இன்ஸான் பார்ட்டி (விஐபி), இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா (ஹெச்ஏஎம்) மற்றும் லோக் ஜன சக்தி (எல்ஜேபி) ஆகிய கட்சிகள் உள்ளன.

இவை அனைத்தும் உ.பி. தேர்தலில் போட்டியிட்டால் பாஜகவிற்கு சாதகமாக்கி, எதிர்கட்சிகளின் வாக்குகள்பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களில் ஜேடியுவின் தலைவரான நிதிஷ்குமார் மட்டும் பாஜக கூட்டணியில் போட்டியிடும்வாய்ப்புகள் உள்ளன.

இதில், அக்கட்சிக்கு உகந்ததொகுதிகள் கிடைக்காவிட்டால் ஜேடியு தனித்து போட்டியிடும். இக்கட்சியின் முக்கிய வாக்காளர்களான குர்மி சமூகத்தினர் கிழக்குபகுதியின் உ.பி.யில் கணிசமாக உள்ளனர்.

மற்றொரு கட்சியான விஐபியின் தலைவர் முகேஷ் சஹானி, பிஹாரின் அமைச்சராகவும் உள்ளார். தனித்து போட்டியிடுவதாக கூறும்இவர், அதற்கானப் பூர்வாங்க பணிகளில் இறங்கியுள்ளார்.

இதன்துவக்கமாக உபியின் பலஇடங்களில் பூலன்தேவியின் சிலையை நிறுவத் திட்டமிடுகிறார். சம்பல்பள்ளத்தாக்கின் முன்னாள் கொள்ளைக்காரியும் சமாஜ்வாதியின் எம்.பி.யுமான பூலன்தேவி, மீனவர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

இவரது நினைவு நாளான ஜுலை 26 இல் உ.பி.யில் பூலன் தேவிக்கு சிலைகளை வைக்க முயல்கிறார். இந்தசிலைகளுக்கான முயற்சி, ஏற்கனவே சில மீனவ சமுதாயக் கட்சிகளால் எடுக்கப்பட்டு உ.பி. அரசு அதற்கான அனுமதிதரவில்லை.

இந்நிலையில், அவரது சிலையை அமைத்து விஐபி கட்சி அமைப்பதன்மூலம் மீனவர் ஆதரவைப் பெற முயல்கின்றது. இதற்காக, வாரணாசிக்கு அருகிலுள்ள ஜோன்பூரின் ஷாகன்ச் மற்றும் மிர்சாபூரின் கியான்பூர் மற்றும் ஆசம்கரின் பன்ஸ்தி ஆகியஇடங்களில் பூலன்தேவியின் சிலைகாகத் தேர்வாகி உள்ளன.

இப்பகுதிகளில் மீனவர் சமுதாயத்தினர் அதிகம் உண்டு. பிஹாரின் விஐபி கட்சியானது பிற்படுத்தப்பட்டு மற்றும் மீனவர் சமுதாயத்திற்கான கட்சியாக உள்ளது.

பிஹாரில் ஆளும்கூட்டணியின் மற்றொரு உறுப்பினரான ஹெச்ஏஎம் கட்சியும் உ.பி. தேர்தல் மூலம் கால்பதிக்க முயல்கிறது. இக்கட்சியின் தலைவரான முன்னாள் முதல்வர் ஜிதன் ராம்மாஞ்சி தனது மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் ஆதரவை உ.பி.யிலும் தேட முயல்கிறார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வளர்ந்த இந்தியாவிற்கான விருப் ...

வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கன அடித்தளம் வளர்ந்த இந்தியாவிற்கான விருப்பங்கள் மற்றும் தீர்வுகளுக்கு வலுவான அடித்தளத்தை ...

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை

மத்திய பட்ஜெட் ஒரு பார்வை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி கடைசி நபரையும் சென்றடைந்தது முதலீடு மற்றும் கட்டமைப்பு ஆற்றல் மற்றும் வெளிக்கொணர்தல் பசுமை வளர்ச்சி இளைஞர் சக்தி ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயன ...

நடுத்தர வர்க்கத்தினருக்கு பயனளிக்கும் பட்ஜெட் நம் நாட்டில் கடினமாக உழைக்கும் நடுத்தர வர்க்கத் தினருக்கு ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் ...

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் ஐந்தாவது படஜெட் மத்திய அரசின் 2023-24-ஆம் நிதியாண்டு க்கான பொதுபட்ஜெட்டை மக்களவையில் ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர ...

நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் நாட்டுக்காக பாடுபட்ட சுதந்திர வீரர்களின் கனவை நனவாக்குவோம் என ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற ...

பாதுகாப்பற்ற பணிச் சூழல் திறனற்றவர்களின் பரிசு காலநிலை பாராது பொது மக்களுக்காக உழைக்கும் அரசு ஊழியர்களில், ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.