இன்றைய உத்திரப் பிரதேசம் மாபெரும் பொருளாதார சக்தியாக உருவெடுத்துக் கொண்டிருப்பதனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த பத்து வருடங்களில் உத்திரப்பிரதேசம் இந்தியாவின் மிக வலிமையான, மிக முன்னேற்றமடைந்த மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் என்கிறேன் நான். எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
அபாரமான திட்டமிடல்களுடன் யோகி ஆதித்யநாத் இந்தியாவின் மிகப் பின் தங்கிய மாநிலம் என இன்றைக்கு அறியப்படுகிற உ.பி.யின் தலையெழுத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார். உத்திரப்பிரதேசத்தின் உள் கட்டமைப்பு வேலைகள் புயல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் புதிய எக்ஸ்பிரஸ்-வேக்கள், ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை கட்டி முடிக்கப்படுகையில் உத்திரப்பிரதேசம் ஒரு புதிய உலகமாக மாறியிருக்கும்.
உத்திரப்பிரதேசத்தின் பிரச்சினை அது நிலங்களால் சூழப்பட்ட பகுதி என்பதுதான். எந்த ஒரு மாநிலம் கடலை ஒட்டியதாக, துறைமுகங்கள் கொண்டதாக இருக்கிறதோ அந்த மாநிலத்தின் உற்பத்திப் பொருட்களை வெளி நாடுகளுக்கு எளிதாக ஏற்றுமதி செய்ய வசதியானதாக இருக்கும். எனவே தொழிற்சாலைகளை அமைக்க விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும்பாலும் துறைமுகங்கள் இருக்கும் பகுதிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். ஏனென்றால் தொழிற்சாலையானது உள் நாட்டில் இருந்தால் அங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை லாரிகள் அல்லது ரயில்கள் மூலமாக துறைமுகங்களுக்குக் கொண்டுவர வேண்டியிருக்கும். அதனால் உண்டாகும் செலவும், கால விரயமும் அதிகம்.
அதை மனதில் கொண்டு இந்திய ரயில்வே “ஈஸ்ட்-வெஸ்ட் காரிடோர்” எனப்படும் சரக்கு ரயில்கள் மட்டுமே செல்லக்கூடிய பாதையை அமைத்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் உத்திரப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் பொருட்களை குஜராத்தின் துறைமுகத்திற்கோ அல்லது கல்கத்தா துறமுகத்திற்கோ ரயில்கள் மூலமாக மிக எளிதாக, வேகமாக எடுத்துச் செல்ல முடியும் என்கிற நிலமை இன்று உருவாகியிருக்கிறது. ஈஸ்ட்-வெஸ்ட் காரிடோரின் வேலகளில் ஏறக்குறைய எண்பது சதவீதம் முடிவடைந்துவிட்டது. அடுத்த வருடம் அது நடைமுறைக்கு வர சாத்தியங்கள் இருக்கின்றன. உத்திரப் பிரதேசம் மட்டுமல்ல, பிஹார், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் போன்றவையும் இதனால் பெரும் பலனடையும்.
அதற்கும் மேலாக, உத்திரப் பிரதேசத்தில் உற்பத்தியாகும் பொருட்களை கங்கை நதி வழியாக படகுகளில் எடுத்துச் செல்ல வசதியான துறைமுகங்கள் ஏற்கனவே அமைத்து முடிக்கப்பட்டுத் தயாராக இருக்கின்றன. சென்ற வருடம் வாரணாசியில் அப்படியான துறைமுகம் ஒன்று திறக்கப்பட்டிருக்கிறது. இதனால் தேவையான மூலப்பொருட்களை கங்கை நதியின் வழியாகக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், தயாரான பொருட்களை மிக எளிதாக பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லவும் முடியும் என்கிற நிலைமை இன்று உருவாகியிருக்கிறது.
இதன் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை உ.பி.யில் அமைப்பதற்கு வரிசை கட்டிக் கொண்டு நிற்கின்றன. தமிழ்நாட்டினைப் போல முன்னேற்றப் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் , காசுக்கு மலம் தின்னும் அரசியல்வாதிகள் உ.பி.யில் இல்லை. அப்படியே இருந்தாலும் யோகி ஆதித்யநாத்தை எதிர்ப்பதற்குத் துணிவில்லாமல் மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள்.
அதாகப்பட்டது பான்பராக் வாயர்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். டுமிளன் அங்கு வேலை தேடிப் போகிற காலம் வெகுதூரத்தில் இல்லை.
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |