சமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும்

‘எந்த ஒருநாட்டின் வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல், சமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும்,” என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ‘ஷிக்ஷக் பர்வ’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.

இதை பிரதமர் நரேந்திரமோடி நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியாக துவக்கிவைத்தார்.

செவித்திறனற்ற மாற்றுத் திறனாளிகளுக்காக ஒலி மற்றும் எழுத்து இணைந்த சைகைமொழி காணொலிகள் தயாரிக்கப்பட்டு, இந்திய சைகை மொழி அகராதி உருவாக்கப் பட்டுள்ளது.அதேபோல பார்வையற்றோருக்கு ஒலி வாயிலாக பேசும் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன.பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் கல்விசார் தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள், சி.எஸ்.ஆர். நிதிஎனப்படும் ‘கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி’ நிதி வழங்குவோருக்காக விதயாஞ்சலி தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தவிழாவில் சைகைமொழி அகராதி, ஒலி மூலம் பேசும் புத்தகங்கள், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின்தரம் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு, ஆசிரியர்களுக்கான ‘நிஷித்தா’ பயிற்சித்திட்டம், வித்யாஞ்சலி இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி துவக்கிவைத்தார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:எந்த ஒருநாட்டின் வளர்ச்சிக்கும் எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக மட்டுமல்லாமல் சமத்துவத்துடனும் கல்வி இருக்கவேண்டும்.இதனால்தான் இந்தியாவில் கல்வியின் ஒருபகுதியாக சைகைமொழி அகராதி பேசும் புத்தகங்கள் உருவாக்கப் பட்டுள்ளன.
தேசிய விருதுபெற்ற ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். கடினமான சூழ்நிலையிலும் பணியாற்றிய உங்கள்முயற்சி பாராட்டுக்குரியது. இன்று துவங்கப்பட்ட திட்டங்கள், கல்வித் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும். பள்ளியின் தரமதிப்பீடு மற்றும் உறுதிப்பாடு, போட்டித்தன்மையை ஏற்படுத்துவதுடன் மட்டுமல்லாமல், மாணவர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்தும்.அனைத்து ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஒவ்வொருவீரரும் 75 பள்ளிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுடன் ஒருமணிநேரம் செலவிட்டு விளையாட்டுக்கு அவர்களை ஊக்கப்படுத்தவும் வேண்டுகிறேன். ஒலிவடிவிலான புத்தகங்கள், கல்வி முறையின் ஒருபகுதி. இந்திய சைகை மொழிக்கான அகராதி உருவாக்கப்பட்டு உள்ளது. நாட்டில் முதல் முறையாக இந்திய சைகை மொழி, ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.செப். 17 வரை நடக்க உள்ள இந்த கருத்தரங்கில் புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜே ...

பாஜக – அதிமுக கூட்டணி உறுதி ஜேபி நட்டாவையும் சந்நதித்த பழனிசாமி 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான ...

அ. தி மு க , பாஜக கூட்டணி – விளக் ...

அ. தி மு க ,  பாஜக கூட்டணி – விளக்கமளித்த பழனிசாமி அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு அதிமுக ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிர ...

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்ரல் 6 ல் திறந்து வைக்கிறார் பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6ம் ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை க ...

பிரிவினை வாதத்துடனான உறவுகளை கைவிடும் இயக்கங்கள் ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்க ...

ஜூன்மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ...

மருத்துவ செய்திகள்

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...