பெட்ரோல் விலை 35ரூபாய் குறைக்க மத்தியஅரசு தயாராக இருப்பதாக ஊரக உள்ளாட்சிதேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொதுமக்களின் கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்தார்.
விழுப்புரம் உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் வருகின்ற 6மற்றும் 9ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விழுப்புரம் அருகிலுள்ள அன்னியூர் பகுதியில் பிரச்சாரம் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாநில பிஜெபி தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டு உரையாற்றினார். அண்ணாமலை உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்த பொது மக்களில் ஒருவர் பெட்ரோல் விலையை எப்போது குறைப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கும் விதமாகபேசிய அண்ணாமலை: பாஜக கட்சி பெட்ரோல்விலையை 35 ரூபாய் குறைக்கும். பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவந்து விலையை குறைப்போம்.
தமிழக நிதி அமைச்சர் ஜிஎஸ்டி கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் வளைகாப்புக்கு சென்று விட்டார். இது தான் திமுகவின் அவலமான நிலை. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க பிஜெபி அரசு தயாராகஉள்ளது. பெட்ரோல், டீசலை ஏன் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வரக்கூடாது என நிதியமைச்சர் சொல்கிறார் என புரியவில்லை. இதனை தமிழக அரசு விளக்க வேண்டும். சத்தியம் \செய்கிறேன் பாஜக பெட்ரோல் விலையை குறைப்பதற்காக தொடர்ந்து போராடுவோம்.
மாநில அரசு வரியை குறைக்க வேண்டும். திமுகவுக்கு ஆண்டவன் நல்லபுத்தியை கொடுத்து பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர முன்வரவேண்டும். என பேசினார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ... |