பெண்களை மதிக்காத வீடும், நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலகவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ‘அய்யா… புண்ணிய வான்களே! என்னைத் திட்டினாலும் பரவாயில்லை… அதையும்கொஞ்சம் அழகு தமிழில் திட்டுங்கள்…’ என்று கெஞ்சியது பரபரப்பாகப் பேசப்படுகிறது.

அண்ணாதுரை பெயரில் வழங்கப்பட்ட விருதைபெற்ற நாஞ்சில் சம்பத் என்ற மகானுபாவர், தமிழிசையை பற்றிபேசும் போது, ‘இரு மாநிலங்களுக்கு இப்போது ஒருத்தி கவர்னராக இருக்கிறாள்’ எனக்கூறி, தனக்கே உரிய நரகல்நடையில் விமர்சனம் செய்துள்ளார். ஏன் இப்படி ஒருமையில், தரக்குறைவாகப் பேசினீர்கள் என்று நியாயம் கேட்டதுக்கு, ‘மகாகவி பாரதியாரே, பராசக்தியை பற்றி புகழ்ந்து பாடும்போது, சுடர் மிகும் அறிவோடு என்னைப் படைத்துவிட்டாயடி’ என்று ஒருமையில் தான் பாடி இருக்கிறார். அபிராமிப் பட்டரும், ‘சொல்லடி சிவசக்தி, நில்லடி என் முன்னாலே’ என்று ஒருமையில் தான் பாடியுள்ளார். தெய்வங்களையே வாடி போடி, சொல்லடிநில்லடி என்று புலவர்கள் பாடியிருக்கும் போது,

சாதாரண மனுஷியான கவர்னர் தமிழிசையை, ‘அவள் கவர்னராக இருக்கிறாள்’ என்று ஒருமையில் பேசியதுதவறே அல்ல! இப்படி ஒருமையில் பேசியதற்காக, நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். யாருடைய உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சி ஓடிஒளிய மாட்டேன்’ என்று, ரொம்ப தெனாவட்டாகப் பதில் சொல்லி இருக்கிறார் நாஞ்சில் சம்பத்.
திராவிட கட்சியினரும், அவர்களின் வழிவந்தவர்களும், பெண்களை கேவலப்படுத்தி பேசுவது ஒன்றும் புதிதல்ல. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையே, நடிகை பானுமதி பற்றி சட்டசபையில் பேசும் போது, ‘அவள் ஒன்றும் படிதாண்டா பத்தினி அல்ல’ என்று எகத்தாளமாகக் கூறினார். திருமணமாகாத ஜெயலலிதாவை, திருமதி ஜெயலலிதா என அழைத்து அசிங்கப்படுத்தினார் கருணாநிதி. அதுமட்டுமா… மதுரையில் தி.மு.க., ரவுடிகளால், முன்னாள் பிரதமர் இந்திரா கடுமையாகத் தாக்கப்பட்டு, ரத்தம்சிந்திய போது, அம்மையாருக்கு ரத்தம் எங்கேவடிகிறது என்று கேட்டு கேவலப்படுத்தி மகிழ்ந்தவரும் அதே கருணாநிதி தான்.

சட்ட சபையில் கருணாநிதி முன்னிலையில், துச்சாதனனாக மாறி, ஜெயலலிதாவின் சேலையை இழுத்து அசிங்கப் படுத்தியவர் தான் தற்போதைய அமைச்சர் துரைமுருகன். ‘அடப்பாவிகளா! என்னைத்திட்டினாலும் பரவாயில்லை… கொஞ்சம் அழகுதமிழில் திட்டுங்கள். அது, எனக்கு காதில்தேனாக வந்து பாயும்’ என்கிறார் தமிழிசை சவுந்தரராஜன். இதைவிட நாகரிகமாக, நாஞ்சில் சம்பத்தை கண்டனம் செய்யமுடியாது; இனியாவது அவர் திருந்தினால் சரிதான். பெண்களை மதிக்காதவீடும், நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை.

 

நன்றி என்.தொல்காப்பியன்

தினமலர் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...