வெளிநாட்டு சதி இல்லாத முதல் பார்லி கூட்டம் – பிரதமர் மோடி பேச்சு

”கடந்த 10 ஆண்டுகளில் பார்லிமென்ட் கூட்டத் தொடருக்கு முன்னதாக, வெளிநாட்டு சக்திகள் சதி செய்து சர்ச்சை தீயை மூட்டி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தாமல் நடக்கும் முதல் கூட்டம் இது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று துவங்கியது. அதற்கு முன்னதாக, செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:

வரும், 2047க்குள் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் புதிய நம்பிக்கையையும், சக்தியையும் அளிக்கும் என நம்புகிறேன்.

ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஆசிர்வதிக்க வேண்டும் என, செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி தேவியிடம் வேண்டிக் கொண்டேன்.

இந்த கூட்டத் தொடரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும். விரிவான விவாதத்துக்குப் பின் அவை சட்டமாக்கப்படும்.

குறிப்பாக, பெண்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும், மதவெறி அல்லது நம்பிக்கை அடிப்படையிலான பாகுபாடுகள் அகற்றப்படுவதற்கும், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக இந்த கூட்டத்தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

நம் நாடு இளமையானது. இப்போது, 20 – 25 வயதில் உள்ள இளைஞர்கள், 45 – 50 வயதாகும்போது, வளர்ந்த இந்தியாவின் முழுப்பயனை அடைவர்.

அந்த நேரத்தில் கொள்கைகளை உருவாக்கும் இடத்தில் அவர்கள் அமர்ந்திருப்பர். வளர்ந்த இந்தியாவை பெருமையுடன் முன்னெடுத்து செல்வர்.

எனவே, வளர்ந்த இந்தியா என்ற நம் தீர்மானத்தை நிறைவேற்ற, அனைத்து எம்.பி.,க்களும் இந்த கூட்டத்தொடரில் தங்கள் பங்களிப்பை அளிப்பர் என நம்புகிறேன்.

கடந்த, 2014 முதல், பார்லிமென்ட் கூட்டத் தொடர் கூடுவதற்கு முன், ஏதாவது ஒரு சர்ச்சை தீயை மூட்டுவதை வெளிநாட்டு சக்திகள் வழக்கமாக வைத்துள்ளன. முதல்முறையாக எவ்வித குழப்பமின்றி கூட்டத்தொடர் துவங்குவதை, இப்போது தான் பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்ம ...

வக்பு மசோதாவுக்கு எதிரான தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு – பாஜக வெளிநடப்பு வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்த ...

ரம்ஜானுக்காக 32 லட்சம் பரிசுத்தொகுப்பு உத்தரப்பிரதேசத்தில் ரம்ஜானை முன்னிட்டு முஸ்லிம்களுக்காக 32 லட்சம் பரிசுத் ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிற ...

நீண்ட கால காத்திருப்புக்கு பிறகு காஷ்மீர் முதல் ரயில் சேவையை பெறுகிறது நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, காஷ்மீர் பள்ளத்தாக்கு அதன் முதல் ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் மு ...

பிரதமரின் ஆலோசனைக் குழுவில் முன்னாள் ஈ டி இயக்குனர் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் முழுநேர ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோ ...

உணர்வுடன் செயல்பட உறுதிபூணுவோம் – முகம்மது யூனுஸீக்கு பிரதமர் மோடி கடிதம் இந்தியா - வங்கதேசம் இடையேயான பகிரப்பட்ட வரலாற்றுக்கும், தியாகத்துக்கும் ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உத ...

பாஜக – வுக்கு ராகுல் காந்தி உதவுகிறார் – யோகி ஆதித்யநாத் ராகுல் காந்தி ஒரு 'சோதனை மாதிரி' என்றும் பாஜகவின் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...