சீக்கியகுரு ஸ்ரீ குரு தேக்பகதூரின் 400-வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, டெல்லி செங்கோட்டையில் சிறப்புநிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திரமோடியும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய மோடி, “செங்கோட்டைக்கு அருகில் இருக்கும் புனிதகுருத்வார், நமது பண்பாட்டைப் பாதுகாக்க குரு தேக்பகதூர் ஜி எவ்வளவு பெரிய தியாகம் செய்தார் என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. அப்போது நாட்டில் மதவெறி புயல்வீசியது. மதத்தை தத்துவம், அறிவியல், சுயசிந்தனை என்று கருதக்கூடிய நம் இந்தியா, மதத்தின் பெயரால் வன்முறை மற்றும் பல அட்டூழிய ங்களைச் செய்தவர்களை எதிர்கொள்கிறது.
பெரியபெரிய சக்திகளெல்லாம் மறைந்து விட்டன. ஆனால் இந்தியா மட்டும் இன்னும் அழியாமல் நிலைத்துநின்று, முன்னேறுகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியா எந்தவொரு நாட்டுக்கோ அல்லது பிறசமூகத்துக்கோ அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இன்றும்கூட நாம் இந்த முழுஉலகத்தின் நலனுக்காகவே சிந்திக்கிறோம்” எனக் கூறினார்.
உலகவரலாற்றில் மதம், மனிதவிழுமியங்கள், லட்சியங்கள், கொள்கைகளைப் பாதுகாக்க தன் உயிரைத் தியாகம் செய்த ஒன்பதாவது சீக்கியகுருவாக குரு தேக்பகதூர் அறியப்படுகிறார்.
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |