நாட்டில் நாள்தோறும் சுமாா் ரூ.20,000 கோடி அளவுக்கு இணையவழி பணப்பரிவா்த்தனை

இணையவழியில் நாள்தோறும் சுமாா் ரூ.20,000 கோடி பரிவா்த்தனை செய்யப் பட்டு வருவதாக ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திரமோடி தெரிவித்தாா்.

பிரதமா் மோடி தனது மாதாந்திர மனதின்குரல் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறாா். நடப்பு மாதத்துக்கான நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவா் உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

பாபாசாஹேப் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14-ஆம் தேதி முன்னாள் பிரதமா்களுக்கான அருங்காட்சியகம் தில்லியில் திறந்துவைக்கப்பட்டது. அவா்கள் குறித்த அரியதகவல்களும், அவா்கள் பயன்படுத்திய பொருள்களும் அங்கு இடம்பெற்றுள்ளன. நாட்டின் வரலாறு குறித்து அறிந்துகொள்ளவும் அந்த அருங்காட்சியகம் உதவும். மகாத்மா காந்தியடிகள், சா்தாா் வல்லபபாய் படேல், அம்பேத்கா், ஜெய்பிரகாஷ் நாராயண், நாட்டின் முதல் பிரதமா் ஜவாஹா்லால் நேரு ஆகியோா் குறித்த தகவல்களும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்கள் மக்கள்இயக்கமாக மாறியுள்ளது. நாட்டின் வரலாறு குறித்து அறிந்து கொள்வதற்கு மக்கள் அதிகஆா்வம்காட்டி வருகின்றனா். இந்நிலையில், முன்னாள் பிரதமா்களின் அருங்காட்சியகமானது இளைஞா்களைக் கவரும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகங்கள் குறித்தவிழிப்புணா்வு மக்களிடையே தற்போது அதிகரித்துள்ளது. பழங்காலப் பொருள்களைப் பலா் அருங்காட்சியகங்களுக்கு அளித்துவருகின்றனா். இதன்மூலமாக நாட்டின் பாரம்பரியத்தைப் பலருக்குத் தெரியச் செய்வதை அவா்கள் ஊக்குவித்து வருகின்றனா். உலக அருங்காட்சியக தினம் மே 18-ஆம் தேதி கடைப்பிடிக்கடவுள்ளது. அன்று மக்கள் உள்ளூரில் உள்ள அருங்காட்சியகத்துக்குச் சென்று அனுபவங்களை சமூக வலை தளங்களில் பகிா்ந்து கொள்ள வேண்டும்.

எளிமையாகும் வாழ்க்கை: தற்காலத்தில் தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சாலையோர உணவுக் கடைகளில் கூட இணையவழி பணப் பரிவா்த்தனை வசதிகள் காணப்படுகின்றன. தில்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும் அத்தகையவசதிகள் சென்றடைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பீம் யுபிஐ வாயிலாகப் பணப் பரிவா்த்தனை மேற்கொள்வது அதிகரித்துள்ளது.

நாட்டில் எண்ம (டிஜிட்டல்) பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. மக்களின் வாழ்க்கையை இணையவழிப் பணப் பரிவா்த்தனை வசதிகள் எளிமைப்படுத்தியுள்ளன. அதன் காரணமாக பணத்தைக் கையில் வைத்திருக்க வேண்டியதற்கான அவசியம் குறைந்துள்ளது.

தற்போதைய சூழலில் நாட்டில் நாள்தோறும் சுமாா் ரூ.20,000 கோடி அளவுக்கு இணையவழி பணப்பரிவா்த்தனை நடைபெறுகிறது. கடந்த மாா்ச்சில் மட்டும் யுபிஐ வாயிலாக சுமாா் ரூ.10 லட்சம் கோடி பரிவா்த்தனை செய்யப்பட்டது. நாட்டில் நிதிசாா் தொழில்முனைவு நிறுவனங்களும் அதிகரித்துவருகின்றன.

எண்ம கலைக் கூடம்: தொழில்நுட்ப வசதிகளானது மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தியுள்ளன. முக்கியமாக, மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில்நுட்ப வசதிகள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன.

தொழில் நுட்பங்களை பயன் படுத்தி விளையாட்டு, கலை, படிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவா்கள் முன்னேறி வருகின்றனா். மாற்றுத்திறனாளி கலைஞா்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் எண்ம கலைக் கூடத்தை ‘வாய்ஸ் ஆஃப் ஸ்பெசலி ஏபிள்டு’ என்ற அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. அதில் மாற்றுத்திறனாளி கலைஞா்கள் வரைந்த ஓவியங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...