உலகப்போருக்கு பிந்தைய உலகை கட்டமைப் பதில் சர்வதேச ஆட்சிமுறை தோல்வி யடைந்து விட்டது

உலகப்போருக்கு பிந்தைய உலகை கட்டமைப் பதில் சர்வதேச ஆட்சிமுறை தோல்வி யடைந்து விட்டதாகவும் தற்போதைய நெருக்கடிகள் அதனை தெளிவாக உணர்த்து வதாகவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

ஜி 20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய தினத்தின் முதல்அமர்வை பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: ”உலகின் பல பகுதிகள் இன்று பிரச்சினையில்உள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கடந்த சிலவருடங்களாக உலகம் அனுபவித்து வரும், நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், பெருந்தொற்று பொது முடக்கம், பயங்கர வாதம், போர் போன்றவை சர்வதேச ஆட்சி முறை தோல்வியடைந்து விட்டதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

பல வருடகால முன்னேற்றங்களுக்கு பின்னர், நீடித்த வளர்ச்சியின் இலக்குகளை எட்டுவதில் இன்று நாம் பின்னோக்கிசெல்லும் அபாயத்தில் உள்ளோம். பலவளரும் நாடுகள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய தாங்கமுடியாத கடன்களில் போராடுகின்றன. பணக்கார நாடுகளால் ஏற்படுகின்ற வெப்பமயமாதல் விளைவுகளையும் அந்தநாடுகள் எதிர்கொள்கின்றன. இதனால்தான், இந்தியா தலைமை வகிக்கும் இந்த ஜி20, உலகளாவிய தெற்கின்குரலாக ஒலிக்க முயல்கிறது.

உலகம் தீவிரமாக பிரிந்திருக்கும் நேரத்தில் நாம் அனைவரும் இங்குகூடியிருக்கிறோம். தற்போது இந்த அறையில் இல்லாதவர்களுக்காகவும் (இதில் பங்கேற்காத நாடுகளுக்காகவும்) நாம் பொறுப்பேற்க வேண்டும். முடிந்தவரையில் நம்மால் ஒன்றிணைந்து தீர்க்க முடியாத பிரச்சினைகள் உருவாவதை நாம் அனுமதிக்கக்கூடாது. உலகிற்கு தலைமை வகிக்க முயலும் எந்தஒரு குழுவும், பாதிக்கப்படுகிறவர்களின் கருத்துக்களை கேட்காதபோது, அக்குழுவால் உலகளாவியத் தலைமைக்கு உரிமைகோர முடியாது. நாம் அனைவரும் எது நம்மை ஒருங்கிணைக்கிறது என்பதில் கவனம் செலுத்தவேண்டும். எது நம்மை பிரிக்கிறது என்பதில் இல்லை.” இவ்வாறு பிரதமர் பேசினார்.

இந்த கூட்டத்தில், ஜி 20 உறுப்பு நாடுகளைத்தவிர, வங்கதேசம், எகிப்து, மொரீசியஸ், நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், சிங்கப்பூர், ஸ்பெயின், ஐக்கிய அமீரகம் ஆகிய 9 விருந்தினர் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். உக்ரைன் போரில், அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகளுக்கும், ரஷ்யா சீனா கூட்டுக்கும் இடையிலான பிளவு அதிகரித்துவரும் நிலையில் உலகம்சந்தித்து வரும் முக்கியமான சிக்கல்கள் குறித்து இந்தகூட்டத்தில் அமைச்சர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கூட்டத்தின் முடிவில், இந்தியா ஒரு கூட்டு அறிக்கையை வெளியிடுவதற்கு முயற்சி மேற்கொள்கிறது. பெங்களூருவில் நடந்த ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களின் மாநாடு எந்தவித ஒரு மித்த கருத்தும் கொண்ட கூட்டறிக்கை வெளியிடப் படாமல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷி ...

ஆச்சார்ய லக்ஷ்மிகாந்த் தீக்ஷித் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் காசி விஸ்வநாதர் தாம்  அர்ப்பணிப்பு மற்றும் ராமர் கோயில் பிரதிஷ்டையில் ...

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க த ...

கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசு-கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக -வினர் கைது சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய திமுக அரசைக் ...

இர தரப்பு உறவை மேலும் வலுப்படுத ...

இர தரப்பு உறவை மேலும் வலுப்படுத்த ஷேக் ஹசீனா மோடிக்கு அழைப்பு இந்தியா - வங்கதேசம் இடையேயான இருதரப்பு உறவை மேலும் ...

வங்க தேசத்தவர்களுக்கு மருத்து ...

வங்க தேசத்தவர்களுக்கு மருத்துவ விசா -மோடி அறிவிப்பு புதுடில்லி : பிரதமர் மோடி வங்கதேசம் வர வேண்டும் என ...

யோகா தினத்தையொட்டி பிரதமரின் உ ...

யோகா தினத்தையொட்டி பிரதமரின் உரை "யோகா பயிற்சி செய்பவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது" "யோகாவினால் ...

ஜம்மு-காஷ்மீர் சொந்த எதிர்கால ...

ஜம்மு-காஷ்மீர்   சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஸ்ரீநகரின் ஷேர்-இகாஷ்மீர் சர்வதேசமாநாட்டு மையத்தில் (SKICC) நேற்று நடைபெற்ற, ...

மருத்துவ செய்திகள்

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...