அரசு அதிகாரிகளின் பணித் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தோடு அவர்களுக்கு பயிற்சி அளிக்கும், ‘கர்மயோகி’ என்ற திட்டம், 2020 செப்.,ல் துவக்கப்பட்டது. இதன்படி பணியிடை பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கர்மயோகி தேசிய கற்றல் வார நிகழ்ச்சியை டில்லியில் பிரதமர் மோடி நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கர்மயோகி திட்டத்தின் வாயிலாக அரசு அதிகாரிகளுக்கு தேவையான பணியிடை பயற்சி வழங்கும் முயற்சி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில், 1,400க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளில், 1.5 கோடி பேருக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தற்போது, ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு என்பதை உலக நாடுகள் ஒரு வாய்ப்பாக பார்க்கின்றன. நம் நாட்டிலும், செயற்கை நுண்ணறிவு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், மற்றொரு ஏ.ஐ., எனப்படும் ‘ஆஸ்பிரேஷன் இந்தியா’ என்ற முன்னேற விரும்பும் இந்தியா என்ற சவால் நம்முன் உள்ளது.
இந்த இரண்டும் இணையும்போது, 2047ல் வளர்ந்த நாடு என்ற இலக்கை நாம் சுலபமாக எட்ட முடியும்.
இதற்கு, அரசு அதிகாரிகள், நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதன் வாயிலாக தங்களுடைய பணித் திறன்களை மேம்படுத்தி கொள்வதுடன், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். அதற்கு இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் உதவும்.
ஐ.ஏ.எஸ்., போன்ற குடிமைப்பணிகளுக்கு தனியாக பாடத்திட்டங்கள் உள்ளன. இதில் புதுமையை புகுத்த வேண்டும். இதற்கு, ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இளைஞர்கள், ஆராய்ச்சி அமைப்புகள் தங்களுடைய ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |