தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி பகுதிகளில் பொழிந்த பெருமழைக்கு முன்பாக அரசு எவ்வித எச்சரிக்கையையும் விடுத்து பள்ளங்களில் வாழும் மக்களையும் தாமிரபறணி ஆற்றங்கரையில் வாழும் மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளாததால், மனித உடல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதை ஒரு வீடியோவில் பார்த்து அதிர்ச்சியடைந்தநான், நளைக்கு இங்கு வருவதாக திட்டமிட்டிருந்ததை மாற்றி இன்றைக்கே வந்துவிட்டேன்,
எங்கள் சட்டமன்ற எம்.எல்.எ குழு தலைவர் நைனார் நகேந்திரன் அவர்களும், எம்.ஆர் காந்தி அவர்களும் கட்சியினர் அனைவரும் மக்களை காப்பாற்றும் களப்பணியில் உள்ளனர்! ராணுவத்தின் 5 ஹெலிகாப்டர்களும், வடகிழக்கு மாநிலங்களை சார்ந்த பேரிடர் மீட்பு ராணுவ பிரிவுகளும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன!
அனால் மாநிலத்தின் முதலமைச்சர் எங்கே? ஐ.என்.டி. கூட்டணி கூட்டத்தில் கலந்துக்கொள்ள டெல்லிக்கு விரைந்திருக்கிறார் முதலமைச்சர்! இங்கே மக்களெல்லாம் பரிதவிக்கும் வேளையில் அரவிந்த் கெஜ்ஜிரிவாலுடன் மகிழ்சியை பகிர்ந்துக்கொள்கிறார் முதலமைச்சர், அந்த நிகழ்ச்சியை சற்று ஒத்திவைத்துவிட்டு அல்லது இந்த பேரிடர் காரணத்தை தெரிவித்துவிட்டு இங்கு வந்திருந்தால், அதிகாரிகள் இன்னும் வேகமாக பணியாற்றியிருப்பார்கள், பல உயிர்களை காப்பாற்றியிருக்கலாமே?
என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிய பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நடைபெறும் மீட்புபணிகளில் பாஜகவினரும் இணைந்து பணியாற்றும் சூழலில் தானும் இணைந்து மீட்புப்பணி மேற்கொண்டார்!
பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது நிரூபர்கள் அமைச்சர் பொன்முடியின் நீதிமன்ற தீர்ப்பு பற்றி வினவியபோது “ திமுகவின் அஸ்திவாரம் கரையத்துவங்கிவிட்டது “ என்றார்!
ஆம் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வது மட்டுமல்ல விஞ்ஞான ரீதியில் வழக்குகளையும் எதிர்க்கொண்டு வெற்றிக்காண்பவர்கள் திமுகவினர்! அமைச்சராக இருந்த பொன்முடியும் தனக்கு எதிரான வழக்கில் வெற்றிதான் கண்டார்! 2006 முதல் 2011 வரையிலான கருனாநிதி தலைமையிலான திமுக ஆட்சியிலும் கல்வித்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி!
1996 முதல் 2001 வரையிலான ஆட்சியிலும் பொன்முடி அமைச்சர்தான்! அப்போதும் ஊழல் செய்த வழக்கு உள்ளது! அந்த வழக்கினை விழுப்புறத்தில் இருந்து வேலூருக்கு மாற்றி தனக்கு சாதகமான தீர்ப்பை இரண்டே நாளில் பெற்றார் பொன்முடி! அமைச்சர் மீது குற்றம் இல்லை! அவர் இன்னும் அதிகமான சொத்து சம்பாதித்திருக்கவேண்டும்! இந்த சொத்து குறைவுதான் என ஒரு வேடிக்கையான தீர்ப்பினை வேலூர் மாவட்ட நீதிபதி வழங்கினார்! அந்த வாங்கப்பட்ட தீர்ப்புக்கு தடைவிதித்து, வழக்கை உயர் நீதிமன்றம் எடுத்து வாருங்கள் என உயர் நீதிமன்ற நீதிபது ஆனந்த் வெங்கடேசன் உத்தரவிட்டார்! அந்த வழக்கு இன்னும் உயர்நீதிமன்ரத்தில் விசாரிக்கப்படாமல் இருக்கிறது!
ஆனால், 2006 முதல் 2011 வரையிலான காலத்தில் ஊழல் செய்ததற்காக 2017 ல் விழுப்புறம் நீதிமன்றத்திலும் பொன்முடிக்கு சாதகமாக அவர் ”ஊழல் செய்யவில்லை” என ஒரு தீர்ப்பு வெலியானது! அந்த தீர்ப்பை எதிர்த்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது! அந்த மேல் முறையீட்டு வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டது!
” அமைச்சராக இருந்த பொன்முடியும் அவர் மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உண்மைதான் பொன்முடியும் அவர் மனைவி விசாலாட்சியும் குற்றவாளிகள்! குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் 21-12-2023 அன்று காலை 10.30 மணி அளவில் தெரிவிக்கப்படும் . குற்றவாளிகளான பொன்முடியும் அவர்மனைவி விசாலாட்சியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்!”- இதுதான் தீர்ப்பு!
இந்த தீர்ப்புக்கான கருத்தாகத்தான் மக்கள் தலைவர் அண்ணாமலை அவர்கள் திமுக கோட்டை கரைகிறது என விமர்சனம் செய்துள்ளார்! ஆம் திமுகவின் கல் கோட்டை கரைகிறது!
நீதிபதி சர்க்காரியாவை திணறவைத்த கருனாநிதியின் விஞ்ஞான யுத்தியை, இப்போது ஆனந்த் வெங்கடேசனைப்போன்ற நீதிபதிகள் உடைக்க துவங்கி விட்டனர்! “ வருமான வரியை செலுத்திவிட்டால் மட்டும் போதாது! அந்த வருமானம் சரியான வருமானம்தான் என்பதற்கு ”வரி செலுத்தப்பட்டது” என்பதுமட்டும் சாட்சியாக முடியாது! வருமான வரித்துறையினர் வருமானம் சரியானதா? அனியாயமானதா? என ஆராய மாட்டார்கள்! எனவே வரி செலுத்திவிட்டோம் என சொல்லப்படும் ஆதாரங்களை ஏற்க முடியாது”
”கணவன் வேறு மனைவி வேறு என பொன்முடி சொல்வதை ஏற்க முடியாது, இவரது சொத்தைத்தான் இவரின் மனைவி வைத்திருக்கிறார்”- இப்படியெல்லாம் திமுகவின் கல் கோட்டையை உடைக்கும் உளிகள் பலவற்றை நீதிபதிகள் கையில் வைத்துள்ளனர்!
பொன்முடியின் மனைவி விசாலாட்சி அவர்கள் பல தொழில்களை செய்யும் பிசினஸ் மேகனட்டாம்! அவர் பல தொழில்களை செய்கிறாராம், சினிமா படம் எடுக்கிறாராம், ஏற்றுமதி, இறக்குமதி -….… அம்பானி அதானி ரேஜ்சுக்கு பொன்முடியின் மனைவியாம்! மனைவியின் கணக்கு வழக்குகளை பொன்முடியால் கணக்கிடவே முடியாதாம்! – இப்படியெல்லாம் நீதிமன்றத்தில் விவாதங்கள் நடந்ததாக தெரிகிறது!
அதாவது மனைவியின் பெயரில் உள்ள சொத்து விவரங்களை சொல்ல மறுத்துள்ளார் பொன்முடி! நிஜமாக, அடுப்படியை விட்டு வெளியே வராத பொன்முடியின் மனைவிக்கு இந்த கணக்கு எதுவுமே தெரியாது என சொல்லப்படுகிறது! ஆனால் தனது கணவன் ஊரை அடித்து கொண்டு வந்து கொடுக்கிறார் என்பது மட்டும் அவருக்கு தெரியுமாம்! கூட்டுட்தொகை எவ்வளவு என்னும் விவரம் தெரியவில்லை என சொல்லப்படுகிறது! விவரம் தெரிந்தவர்கள் பொன்முடியும் அவரது மகன்களும்தானாம்!
மகாபாரதத்தில் மனைவியை வைத்து சூதாடினார்கள், பொன்முடியோ மனைவியை வைத்து இண்டர்நேசனல் வர்த்தகமே செய்துள்ளதாக தெரிகிறது! உயர்கல்வி அமைச்சராக இருந்து அரசின் கல்லூரிகளை பாதாளத்தில் தள்ளி தனது கல்லூரிகளை வளர்த்து எடுப்பதற்காக தானே துவக்கி நடத்திவரும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களை பற்றிய பேச்சுக்களே நீதிமன்றத்தில் வரவில்லையாம்! அந்த கல்லூரிகளில்தான் பல லட்சம் கோடிகள் புரளுகிறது! அது ஏன் வழக்கில் வரவில்லை? ஏனென்றால் அவருக்கு இரண்டு சிகாமணிகள் பிள்ளைகளாக இருக்கிறார்களாம், அவர்களில் ஒருவர் எம்.பியாம்! அவர்களின் பெயரில்தான் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளுமாம்! இதையெல்லாம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் கொண்டுவரவில்லையாம்!
பொன்முடியின் ஊழல் சொத்து 50,000 கோடியை தாண்டும் என்றுதான் விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்! ஆனால் ஒரு கோடியே 79 லட்சத்திற்குதான் வழக்காம்! இந்த தொகைக்கே நூறுக்கு மேல் சாட்சிகள், நூற்றுக்கணக்கில் பதிவு சாட்சிகள் இவை ஒவ்வொன்றிற்கும் ஒப்புதல் குறுக்கு விசாரனையென 13 ஆண்டுகள் ஆகிவிட்டன! இவர் மீது 2001 ல் போடப்பட்ட வழக்கும் ஒன்று 23 ஆண்டாக முடியாமல் உள்ளது! இந்த வழக்குக்கூட இனி உச்சநீதிமன்றம் செல்லும் அங்கு எத்தனை ஆண்டுகளோ?
1 கோடி 79 லட்சத்திற்கே இவ்வளவு ஆண்டுகள் என்றால் 50,000 கோடிக்கு எத்தனை சாட்சிகள், எத்தனை பதிவு சாட்சிகள் வழக்கு முடிய 100 ஆண்டுகள் கூட ஆகலாம்! எனவேதான் ஒரு சிறுபகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு வழக்கு தொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது! ஒரு ரூபாய் ஊழல் என்றாலும் ஒரு கோடி ஊழல் இன்றாலும் ஒரே தண்டனை தானாம்! ஒருகொலை என்றாலும் ஒன்பது கொலை என்றாலும் ஒரு முறைதானே ஜெயிலுக்கு போகப்போறேன் என சினிமாவில் பேசுவார்களே அதே கதைதான் இது!
ஆனால், மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பதவியில் அமர்ந்த பின்பு, இம்மாதிரி ஊழல் வாதிகளின் சொத்துக்கள் அனைத்தையும் மக்களுக்காக குறுகிய காலத்திலேயே பறிமுதல் செய்யும் சட்டம் வரும் என சொல்லப்படுகிறது!
அந்த சட்டம் வரவேண்டும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்த பொன்முடிக்கு இப்போது விழுப்புறத்தில் சொந்தமாக ஒரு சிரிய வீடு இருந்தால் அதுவே அதிகமானது, சொந்தவீடும் இல்லாத ஆசிரியர்களும் இருக்கிறார்களே! ஒரு வீட்டை மட்டும் வைத்துவிட்டு பொன்முடியின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் வீடுகளையும் இந்தியாமுழுமையும் தமிழகம் முழுமையும் அவர் வாங்கி வைத்திருக்கும் சொத்துக்களையும் உலகம் முழுமையும் இருக்கும் பங்குகள் மற்றும் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும் என்பதுதான் மக்கள் விருப்பமாகும்!
நன்றி – குமரிகிருஷ்னன்
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |