2001-ம் ஆண்டு ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குஜராத்தின் கட்சில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகம், ப்ரிக்ஸ் வெர்சாய்ல்ஸ் அருங்காட்சியகங்கள் 2024-க்கான உலகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
ப்ரிக்ஸ் வெர்சாய்ல்ஸ்-சின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர், வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:
“2001-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக கட்ச் பகுதியில் ஸ்மிருதிவனம் அமைக்கப்பட்டுள்ளது. இது பின்னடைவில் இருந்து மீண்டு வருதல் மற்றும் தைரியத்தை நினைவூட்டுகிறது. ப்ரிக்ஸ் வெர்சாய்ல்ஸ் அருங்காட்சியகங்கள் 2024-க்கான உலகத் தேர்வில் இந்த அருங்காட்சியகம் இடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.”இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |