நாக்பூர் ஆர்.எஸ்.எஸ்.பிரதிநிதி சபை கூட்டம்

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் உயர்மட்டக் குழுவான அகில பாரத பிரதிநிதி சபைக்  கூட்டம் நாகபுரியில் ரேஷிம்பாக்கில் இருக்கின்ற டாக்டர் ஹெட்கேவார் ஸ்ம்ருதி மந்திரில் மார்ச் 16,17&18 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கிளைகளில் இருந்து தேர்வு  செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகள், மாநிலப் பொறுப்பாளர்கள், அகில பாரதப் பொறுப்பாளர்கள் மற்றும் தேசிய

அளவில் செயல்பட்டு வருகின்ற 40கும் மேற்பட்ட சங்கக் குடும்ப அமைப்புகளின் அகில பாரதப் பொறுப்பாளர்கள் மற்றும் உலகில் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்ற ஹிந்துக்களை ஒருங்கிணைத்து வருகின்ற ஹிந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 1,200கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மார்ச் 16 காலை சரியாக 8.30 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் திரு.சுரேஷ் ஜோஷி ஆகிய இருவரும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர். ஹெட்கேவார் நினைவிடத்திற்குச் சென்று மலரஞ்சலி செய்து விட்டு கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்குள் வந்தனர். பின்னர் மங்கள விளக்கேற்றி கூட்டத்தினைத் துவக்கி வைத்தனர்.  துவக்கத்தில் கடந்த வருடத்தில் தேசிய அளவில் சமுதாயத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி மறைந்த  பல பிரமுகர்களின் மறைவிற்கு அஞ்சலி செய்யும் வகையில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்.பொதுச் செயலாளர் திரு.சுரேஷ் ஜோஷி அவர்கள் ஆண்டு அறிக்கையினை வாசித்தார்.


ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் குடும்ப அமைப்புகளான ஏ.பி.வி.பி (மாணவர் இயக்கம்), பி.எம்.எஸ்.(தொழிற்சங்கம்), வி.ஹெச்.பி. வித்யா பாரதி (கல்வி நிறுவனங்கள் அமைப்பு), பாரதீய கிசான் சங்கம் (விவசாயிகள் சங்கம்), சம்ஸ்க்ருத பாரதி, சம்ஸ்கார் பாரதி (நுண் கலை அமைப்பு), க்ரீடா பாரதி (விளையாட்டு அமைப்பு) லகு உத்யோக் பாரதி (சிறுதொழில்கள் அமைப்பு), ராஷ்டிரா சேவிகா சமிதி (பெண்கள் அமைப்பு), ஸ்வதேஷி ஜாகரண் மன்ச் (ஸ்வதேஷி விழிப்புணர்வு), அதிவக்த பரிஷத் (வழக்கறிஞர்கள் அமைப்பு), தீனதயாள் ஆராய்ச்சிக் கழகம், விஞ்ஞான் பாரதி (அறிவியல் அமைப்பு) , வனவாசி கல்யான் ஆஸ்ரம்,  தர்ம ஜாகரண், சீமா சுரக்ஷா(எல்லைப்புற பாதுகாவல்), பூர்வ சைனிக் சேவா பரிஷத் (முன்னாள் ராணுவத்தினர் அமைப்பு), சமரசதா மன்ச் (சமுதாய சமத்துவ), பாரதீய ஜனதா கட்சி, சஹகார் பாரதி (கூட்டுறவுத் துறை), சாஹித்ய பரிஷத் (இலக்கியம்),  விஸ்வ விபாக் (சர்வதேச அளவில் ஹிந்து ஒற்றுமைப் பணி), பாரத் விகாஸ் பரிஷத், சிக்ஷா பச்சாவ் அந்தோலன், சைக்ஷிக் மகாசங், ஆரோக்ய பாரதி, க்ராஹக் பஞ்சாயத் (நுகர்வோர் அமைப்பு), மகிளா சமன்வய, சக்ஷம் (மாற்றுத் திறனாளிகள்), விவேகானந்த கேந்திர உட்பட மேலும் சில அமைப்பினர் ஆர்.எஸ்.எஸ். பிரதிநிதி சபா கூட்டத்தில் கலந்து கொண்டு கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள், இயக்கத்தின் வளர்ச்சி, தங்கள் துறையில் செய்துள்ள சாதனைகள் பற்றிய அறிக்கைகளை சமர்ப்பித்தனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் சார்பில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள், மேற் கொண்ட முயற்சிகள் பற்றி பிரதிநிதிகள் விரிவாக எடுத்துரைத்தனர். இம்மூன்று நாள் கூட்டத்தில் நீண்ட விரிவான விவாதத்திற்குப் பிறகு இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் சமர்ப்பித்த ஆண்டறிக்கையிலிருந்து சில துளிகள்….

2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் நாடெங்கிலும் நடைபெற்ற (சங்க சிக்ஷா வர்க) சங்கத்தின் பயிற்சி முகாம்கள் பற்றிய புள்ளி விவரங்களை எடுத்துரைத்தார்.

நாடெங்கிலும் மொத்தம் 69 இடங்களில் முதலாமாண்டு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. அதில் மொத்தம் 11,507 பேர் கலந்து கொண்டு பயிற்சி முடித்துள்ளனர். 2,781 பேர் இரண்டாமாண்டு பயிற்சி முகாம் முடித்துள்ளனர். நாகபுரியில் ஆண்டு தோறும் 31 நாட்கள் நடைபெற்று வருகின்ற மூன்றாமாண்டு பயிற்சி முகாமில் மொத்தம் 732 பேர் கலந்து கொண்டனர். இத்துடன் கடந்த ஆண்டு சிறப்புப் பயிற்சி (40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக) முகாமில் மொத்தம் 474 ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர்.

(முதலாமாண்டு பயிற்சி முகாம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது. இரண்டாமாண்டு பயிற்சி முகாம் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்காக நடைபெற்று வருகிறது. இவைகள் 20 நாட்கள் நடைபெற்று வருகின்றன. மூன்றாமாண்டு பயிற்சி முகாம் ஆண்டு தோறும் நாகபுரியில் 31 நாட்கள் நடைபெற்று வருகிறது).

கடந்த வருட 3 ஆம் ஆண்டு பயிற்சி முகாமிற்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ.ஜகத்குரு.ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வருகை புரிந்து வாழ்த்துரை வழங்கினார். விஜயவாடாவைச் சார்ந்த ஸ்ரீ.கன.ராஜு அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஷத்திரிய மகா சங்கத்தின் தலைவர் ஜெய்ப்பூரைச்  சார்ந்த பகவான் சிங், மற்றும் பரமபூஜனீய சர்சங்கசலாக் மோகன் பாகவத் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி நாடெங்கிலும் 27,978 இடங்களில் மொத்தம் 40,891 ஷாகா (தினசரிக் கூடுதல்) நடைபெற்று வருகிறது. வாராந்திரக் கூடுதலான மிலன் மொத்தம் 8,508 இடங்களில் நடைபெற்று வருகிறது. மாதாந்திரக் கூட்டமான சங்க மண்டலி மொத்தம் 6,445 இடங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டினைக் காட்டிலும் ஷாகா, மிலன் மற்றும் மண்டலி அதிகரித்துள்ளது.

சங்கத்தின் அகில பாரதத் தலைவர் கடந்த ஆண்டு நாட்டிலுள்ள 19 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து இயக்க வளர்ச்சிக்கும், தொண்டர்களின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியுள்ளார். சர்சங்கசாலக் அவர்கள் நமது நாட்டின் வடகிழக்கு எல்லைப்புற மாநிலமாகிய அருணாச்சலப் பிரதேசத்தில் முதல் முறையாக சுற்றுப்பயணம் செய்து வந்துள்ளார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு  மக்களால் வழங்கப் பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தல ...

சமூகநீதி பேசும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ; கவர்னர் ரவி வேதனை 'சமூக நீதி பேசும் தமிழகத்தில் தினமும் தலித்துகளுக்கு எதிரான ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ...

திமுக நேர்மையான போர்வீரன் அல்ல ; பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பா.ஜ., புறக்கணித்தது தொடர்பான ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுக ...

சமூக சேவைக்கான கவர்னர் விருதுகள் அறிவிப்பு சமூக சேவைக்காக சென்னையை சேர்ந்த ராமலிங்கம், கோவையை சேர்ந்த ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள ...

தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் மனசாட்சி படி பங்கேற்பார்கள் – அண்ணாமலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞ ...

வளர்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞர்களின் பங்களிப்பு தேவை – பிரதமர் மோடி ''நம் இளம் தலைமுறையினரிடம் உள்ள திறன்களால், 2047ல் நாம் ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதம ...

இசட் வடிவ சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறக்கிறார் ஜம்மு - காஷ்மீரில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பிரமாண்ட 'இசட்' ...

மருத்துவ செய்திகள்

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...