தங்கம் இறக்குமதி 30 சதவீதம் குறைய வாய்ப்பு

மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி (சுங்கவரி) இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, நடப்பு 2012-ஆம் ஆண்டில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் இறக்குமதி, 2011-ஆம் ஆண்டைக் காட்டிலும் 33 சதவீதம் சரிவடையும் என ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

தங்கம் பயன்பாடு மற்றும் இறக்குமதியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 2012-ஆம் ஆண்டில் இறக்குமதி குறைந்தால், சீனா முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டில் இந்தியா 969 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது. இது, 2012-ல் 655 டன்னாக குறைய வாய்ப்புள்ளது என ஆய்வில் கலந்து கொண்ட 10 நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களுக்குள்ளாக இறக்குமதி வரியை இரண்டு மடங்கு அதிகரித் திருப்பது தங்க நகைகள் வாங்குபவர்களால் ஜீரணிக்க முடியாத ஒன்று என்றும், தங்கம் இறக்குமதி 30 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்றும் அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யும் இண்டஸ்இந்த் வங்கியின் உதவி துணைத் தலைவர் பினாகின் வியாஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த 2009-ஆம் ஆண்டில் தங்கம் விலை அமோக அளவில் 22 சதவீதம் அதிகரித்தது. எனவே, தங்க நகைகளை பொதுமக்கள் அதிக அளவில் விற்பனை செய்தனர். இதன் காரணமாக அவ்வாண்டில் தங்கம் இறக்குமதி 535.88 டன்னாக குறைந்தது.

ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக உள்ளதால், நாட்டின் வர்த்தக பற்றாக் குறை அதிகரித்து வருகிறது.

கச்சா எண்ணெய், பொறியியல் சாதனங்கள் ஆகிய இரண்டிற்கும் அடுத்தபடியாக தங்கம்தான் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் 3,390 கோடி டாலர் (ரூ.1,69,500 கோடி) மதிப்பிற்கு தங்கம் இறக்குமதி செய்யப் பட்டது. இது, நாட்டின் மொத்த இறக்குமதியில் 8.9 சதவீதமாகும். அந்த நிதி ஆண்டில் இந்தியா, தங்கம் தேவைப்பாட்டில் 92 சதவீதத்தை இறக்குமதி செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் இறக்குமதி 5,800 கோடி டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, வர்த்தக பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகைக் கடைகள் அடைப்பு நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டன. அதேசமயம், வரியை மத்திய அரசு குறைப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...