நரேந்திர மோடி என்ன சிறுபான்மையினருக்கு எதிரானவரா?

குஜராத்தில் ஐந்து நாட்கள் எங்களுக்கு கார் ஓட்டியவரே ஒரு முஸ்லிம்தான். மோடி பற்றி எங்களுக்கு நல்லபிப்ராயம் வர வேண்டும் என்பதற்காக அவர் காட்டிய முனைப்பு எங்களுக்கு ஆச்சரியம் அளித்தது. குறித்த நேரத்திற்கு வந்து, குறித்த நேரத்தில் எங்களை அதிகாரிகளிடம் கொண்டு போய் சேர்ப்பது, சில இடங்களை பார்வையிடப் பரிந்துரை செய்வது என்று அவர்

ஆர்வமாக இருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தபோது, "இங்கே முஸ்லிம்கள் எல்லாம் மோடி மீது நல் அபிப்ராயத்துடனேயே இருக்கிறார்கள்" என்றார் அவர்.

சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவருடன் பேசினேன். அவர், "மோடி ஆரம்பத்தில் தீவிரமான ஹிந்து இயக்கங்களில் பங்கெடுத்தவர் என்பது உண்மை. இதனால் ஆட்சிக்கு வந்த துவக்கத்தில், ஹிந்துக்கள் மட்டுமே தனக்கு வாக்களித்ததாக அவர் கருதியிருக்கலாம். ஆகவே, அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமென்று அவர் நினைத்திருக்கக் கூடும். அதனால் கோத்ரா ரயில் எரிப்பு அவருக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தி, அதையொட்டிய கலவரத்தின்போது பாராமுகமாக இருந்து விட நினைத்திருக்கலாமோ என்னவோ, தெரியாது. ஆனால், அதன் பிறகு நாங்கள் பார்க்கும் மோடி அப்படியில்லை. சமீப பல ஆண்டுகளாக அவர் எல்லோரையும் மிகவும் அரவணைத்தே செல்கிறார். துவேஷம் ஏதும் தெரியவில்லை" என்று குறிப்பிட்டார்.

மற்றொரு முஸ்லிம் பெரியவர், "ஜாலியன் வாலாபாக் படுகொலைகளையே நினைத்துக் கொண்டு, இன்று பிரிட்டன் மீது படையெடுத்துச் செல்வது எப்படி பொருத்தமாக இருக்காதோ, அப்படித்தான் 10 வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு கலவரத்தை மீண்டும், மீண்டும் கிளறி, அரசியல் செய்வதும். அது முடிந்த போன விஷயம். கடந்த 10 வருடமாக எந்த மத மோதலும் இங்கு இல்லை. மக்கள் அமைதியாக வாழ்கிறோம். மோடி அரசு முஸ்லிம் மக்கள் மீது எந்தவித துவேஷமும் இப்போது காட்டி வருவதாக நாங்கள் நினைக்கவில்லை. அவருக்குத்தான் வாக்களிக்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

ஜாஹீர் என்ற தெருவோர வியாபாரியும், அதுபோலவே குறிப்பிட்டார். "எந்த துவேஷமும் இல்லை. எல்லோரும் சமமாக, இணக்கமாக வாழ்கிறோம். மோடி இந்த மாநிலத்தை மிக நேர்த்தியாகக் கொண்டு போகிறார். மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. தெருவில் கடை நடத்தும் நான் மாதம் 15,000 ரூபாய்க்குக் குறையாமல் சம்பாதிக்கிறேன்" என்றார்.

ஆஸ்வின் ஸ்டான்லி என்ற தமிழ்ப் பெண், கடலோர பாதுகாப்பு மற்றும் சதுப்புநிலக் காடுகளில் டாக்டர் பட்டம் வாங்கியவர். ஐ.நா. சபை மற்றும் பல்வேறு நாடுகளுக்கு அந்தத் துறையில் கன்சல்ட்டன்டாக இருப்பவர். பரோடாவின் 'கிறிஸ்தவ தமிழ் ஐக்கிய கூடுகை'யின் தலைவியாகவும் இருக்கிறார். அவரிடம் குஜராத் வாழ்க்கை பற்றி பேசினேன். "2000 -ஆம் ஆண்டு கடலோரத்தில் அருகி வரும் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக, சென்னையிலிருந்து குஜராத்திற்கு இடம் பெயர்ந்தேன். இங்கு நான் அனுபவித்த சுதந்திரமும், பாதுகாப்புணர்ச்சியும் என்னை இங்கேயே வீடு வாங்கி செட்டிலாக வைத்து விட்டது. இரவு 12 மணிக்குக் கூட பாதுகாப்பாக வீடு வந்து சேர முடிகிறது. பயமில்லை. பல லட்சம் தமிழர்கள் இங்கு இருக்கிறோம். ஏராளமான கிறிஸ்தவர்களும் இருக்கிறோம். இந்த ஆண்டு தேர்தல் வரவுள்ளது. தமிழர்களில் பெரும்பாலும், கிறிஸ்தவர்களில் பெரும்பாலும் மோடிக்கே வாக்களிப்பார்கள்.

"எந்த முடிவையும் சிந்தித்து அறிவிக்கும் மோடி, அறிவித்த பிறகு அதில் ஸ்திரமாக இருப்பார். டெட்லைன் வைத்து எந்தத் திட்டத்தையும் அறிவிப்பதும், அதன்படி நடத்தி முடிப்பதும், அவரது தனிச் சிறப்பு. ஃபாலோ-அப் என்பது மோடியின் வெற்றிக்குப் பிரதான காரணம் என்று சொல்லலாம். என் தாய் மாநிலமான தமிழகமும் குஜராத் மாதிரி மாற வேண்டும் என்பது என் ஆசை. அதற்குப் பொருத்தமான முதல்வர், ஜெயலலிதான் என்பது என் நம்பிக்கை" என்றார் ஆஸ்வின்.

தமிழகத்தைப் போலவே, குஜராத்திற்கும் பீஹார், ஒரிஸ்ஸா போன்ற மாநில இளைஞர்கள் பிழைப்புக்காக வருகிறார்கள். நான் சந்தித்த மூன்று இளைஞர்கள் ஒரு கனரக தொழிற்கூடத்தில் வேலை செய்கிறார்கள். "குஜராத் அமைதியாகவும், செழுமையாகவும், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மாநிலமாகவும் உள்ளது. முதல்வர் மோடியின் திட்டங்கள் எல்லாம் இந்த மாநிலத்தை மிகவும் உயரத்தில் கொண்டு போய் வைத்துள்ளது. நல்ல வருமானம் கிடைக்கிறது. அமைதியான வாழ்க்கை கிடைக்கிறது. வெறென்ன வேண்டும்? இங்கேயே இருந்து விடலாம் என்று முடிவு செய்து விட்டோம்" என்றார்கள் அவர்கள்.

அடுத்து தங்க வீடு இல்லாமல் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை போட்டு பால் வியாபாரம் செய்யும் ஒரு பெண்மணியை, சாலையோர குடிசை ஒன்றில் சந்தித்துப் பேசினேன். "மோடி எல்லோரைப் பற்றியும் கவலைப்படுகிறார். குறிப்பாக கிராமங்கள், ஏழைகளுக்கான திட்டங்கள் இங்கு அதிகம். பெண் பிள்ளைகளின் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறார். நாங்கள் மாடு மேய்த்தாலும், எங்கள் குடும்பத்து பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்குச் சென்று படிக்கின்றன. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்" என்று சிரித்தபடி சொன்னார் அவர். மாடு மேய்க்கும் அந்தக் குடும்பத்தினர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பால் விற்பனை செய்கிறார்கள். மாதாமாதம் பால் விற்பனை மூலம் அவர்கள் பெறும் தொகையைக் கேட்டால், நம்மில் பலருக்கும் மாடு மேய்க்கப் போகலாமா என்று தோன்றக் கூடும். ஆமாம்… அவர்களின் மாத வருமானம் 35,000 முதல் 40,000 ரூபாய்.

இதுபோன்ற ஆச்சரியங்கள் ஒருபுறம் இருக்கட்டும். குஜராத் குறித்து இன்னும் சில கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

  •  பல மாநிலங்களின் மொத்த வருவாயில், மதுபான விற்பனை வருமானம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், குஜராத்தில் மது விற்பனை கிடையாது. அதன் மூலம் வரும் வருவாயும் கிடையாது. ஆனால், மற்ற மாநிலங்களை விட அதிக வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவது குஜராத்திற்கு எப்படி சாத்தியமாகிறது?
  • பிற மாநிலங்களில் ஒரு தொழிற்சாலை வருகிறது என்றால், உடனே விவசாயிகளுக்குப் பாதிப்பு, கிராமங்களுக்குப் பாதிப்பு என்று கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சியினரும், அதனால் தூண்டி விடப்படும் பொதுமக்களும் போராட்டத்தில் குதித்து விடுகின்றனர். தொழிற்சாலை வராமலே போகிறது. ஆனால், குஜராத்தில் மட்டும் தொழிற்சாலைகள் வந்த வண்ணம் உள்ளன. இது எப்படி முடிகிறது? 
  •  இந்தியாவில் தொழில் செய்ய வருபவர்களின் முன் நிற்கும் முதல் சாய்ஸ் குஜராத். அவர்களை எல்லாம் வளைத்துப் போட குஜராத் அரசு தன் கையில் வைத்திருக்கும் சொக்குப் பொடிதான் என்ன?

 

ஓட்டுக்குப் பணம் இல்லை; இலவசப் பொருட்கள் இல்லை. ஆனாலும், மோடிக்கு அமோக ஆதரவு நிலவும் மர்மம்தான் என்ன?

இந்தச் சந்தேகங்களை எல்லாம் யாரிடம் கேட்டு தீர்த்துக் கொள்வது? நரேந்திர மோடியை விட பொருத்தமானவர் கிடைப்பாரா என்ன?

நன்றி ; துக்ளக்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதி ...

தமிழகத்தில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி 'பெஞ்சல்' புயல், தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து, ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வே ...

மக்கள் மன்றத்தில் வெற்றி பெற வேண்டும் – அண்ணாமலை எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் தப்பித்தாலும், மக்கள் மன்றத்தில் வெற்றி ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக ...

புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நி ...

மூன்று குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றிய நீதிபதிகளுக்கு நன்றி – பிரதமர் மோடி 'புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்திய உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரல ...

சாகசத்தை மட்டுமே பேசுகிறது வரலாறு – அமைச்சர் ஜெய் சங்கர் ''அனைத்து சமூகத்திலும் வரலாறு என்பது சிக்கலானது. அன்றைய அரசியல் ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அம ...

தி சபர்மதி ரிப்போர்ட் படத்தை அமைச்சர்களுடன் பார்த்த பிரதமர் மோடி குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

மாதுளம் பூவின் மருத்துவக் குணம்

மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ...

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...