அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விவாதம் லோக்சபாவில் நேற்று துவங்கியது. விவாதத்தை துவக்கி வைத்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
தற்போதைய அமிர்த காலத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் 75ம் ஆண்டு விழாவை கொண்டாடும் நாம் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள்.
ஏதோ ஆங்கிலேயேர்களிடமிருந்து கடன் வாங்கி நம் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதுபோல சிலர் பேசுவது தவறு. நம் சுதந்திர போராட்டம் மற்றும் நமது கலாசார அம்சங்களையும் உள்ளடக்கி தயாரிக்கப்பட்டதுதான் இந்த புத்தகம்.
அரசியல் நிர்ணய சபையில் மதன் மோகன் மாளவியா, சர்தார் படேல், பகத்சிங், வீர் சாவர்க்கர் ஆகியோர் தங்களது பங்களிப்பை செய்துள்ளனர்.
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி உள்ளிட்ட பலரது பங்களிப்பும் இந்த அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. வலிமையான மத்திய அரசும், ஜனநாயக ரீதியிலான அரசியல் அமைப்பு சட்டமும் அமைய வேண்டும் என்றும் ஷியாமா பிரசாத் முகர்ஜி விரும்பினார். ஆனால், அரசியலமைப்பு சட்டத்தை, ஒரு கட்சி, தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளப் பார்த்தது.
இந்த புத்தகம் ஒன்றும், ஏதோ ஒரு கட்சி, நமக்கு தந்த பரிசு அல்ல. இது இந்திய மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. இதன் வாயிலாகத்தான், ஒரு ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவர் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் ஆக முடிந்தது.
அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரிஜினல் புத்தகத்தில் அடிப்படை உரிமைகள் பற்றி விவரிக்கும் பக்கங்களில் ராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அரசியலமைப்பு சட்டப் புத்தகத்தை தங்களுடைய பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சிலர் திரிகின்றனர். சிறிய வயதிலிருந்தே அவர்களுக்கு இந்த பழக்கம்.
காரணம், பல தலைமுறைகளாக அரசமைப்புச் சட்டம், அவர்களது குடும்பத்தினுடைய பாக்கெட்டுகளில் இருந்துள்ளது. தற்போது தான் அதை பா.ஜ., தன் நெற்றியில் வைத்து வணங்குகிறது. அதிகாரமா, அரசமைப்புச் சட்டமா என்றால், எப்போதுமே அதிகாரத்தையே காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |