” ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சீர்குலைக்க கிடைக்க எந்த ஒரு முயற்சியையும் காங்., தவற விடவில்லை,” என பிரதமர் மோடி கூறினார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டு விழா குறித்த சிறப்பு விவாதம் லோக்சபாவில் நேற்று துவங்கியது. இந்த விவாதத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் துவக்கி வைத்து இருந்தார். இதன் மீது காங்கிரசின் பிரியங்கா உள்ளிட்ட பல்வேறு கட்சி எம்.பி.,க்கள் பேசியிருந்தனர்.
இந்த விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதனால் தான் ஜனநாயகத்தின் தாய் என அழைக்கப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகள் பெண்களுக்கு ஓட்டுரிமையை நீண்ட நாட்களுக்கு பிறகே வழங்கின. நமது அரசியலமைப்பு பெண்களுக்கு ஆரம்பம் முதலே ஓட்டுரிமை வழங்கியது. இன்று ஒவ்வொரு திட்டத்தின் மையமாக பெண்கள் உள்ளனர். இச்சமயத்தில் ஜனாதிபதி பதவியில் பெண் உள்ளார்.
நாடு மிக வேமாக நமக்கு ஆதரவு அளித்து வருகிறது. விரைவில் உலகளவில் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறப்போகிறது. நாட்டை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவது என்பது நமது லட்சியம். இதனை அடைய அரசியலமைப்பை பயன்படுத்தி உழைக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமையை அரசியலமைப்பு வலியுறுத்துகிறது. அரசியல் சட்ட நிர்ணய சபையில் சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் உறுப்பினர்களாக இருந்தனர்.
பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தும் இந்தியா ஒற்றுமையாக உள்ளது. விடுதலைக்கு பிறகு சில இந்தியர்கள் அடிமை மன நிலையிலேயே சிக்கி உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ., அரசின் முடிவுகள் அனைத்தும் நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் உள்ளன.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவசர நிலைகொண்டு வரப்பட்டு, அரசியலமைப்புக்கு முடிவுரை எழுதப்பட்டது. மீடியா சுதந்திரம் நசுக்கப்பட்டது. நாடு முழுதும் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. அவசர நிலை கொண்டு வந்த காங்கிரசின் நெற்றியில் உள்ள கறை அழியாது. ஜனநாயகத்தை நெரித்த கறைகளை காங்கிரஸ் கட்சியால் கழுவ முடியாது.
அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டிய அவசியம் என்ன காங்கிரஸ் தலைவர் ஒருவர் கேட்டார். அரசியலமைப்பு இல்லை என்றால், எங்களை போன்றவர்கள் இங்கு வந்திருக்க முடியாது. 3 முறை மக்கள் எங்களை இங்கு அனுப்பி வைத்துள்ளனர்.
55 ஆண்டுகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சியில் இருந்தனர். காங்., கின் ஒரே குடும்பம் ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் சீர்குலைப்பதற்கு கிடைத்த எந்தவொரு வாய்ப்பையும் விட்டு வைக்கவில்லை. அக்குடும்பம் அரசியலமைப்பை அதிகம் காயப்படுத்தியது. நாட்டு மக்கள் முழு வலிமையுடன் அரசியல் சாசனத்துடன் நிற்கிறார்கள
1947 – 52 வரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு இங்கு இல்லை. 1952 முன்பு ராஜ்யசபாவும் உருவாக்கப்படவில்லை. ஆனால், அரசியலமைப்பை மாற்றுவதற்கு அவசர சட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தது. இதற்கு அப்போதைய ஜனாதிபதி, சபாநாயகர், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த போதும், அச்சட்டத்தை நேரு கொண்டு வந்தார். அரசியலமைப்பை மாற்றுவது அக்கட்சியின் குணமாக மாறியது. நேரம் கிடைக்கும் போது எல்லாம் காயப்படுத்தினார்கள். நமது பாதையில அரசியலமைப்பு குறுக்கிட்டால் அதனை மாற்ற வேண்டும் என நேரு கூறினார்.
75 ஆண்டுகளில் அரசியலமைப்பை 60 முறை காங்., மாற்றியது. அரசியல்சாசனத்தை காங்கிரஸ் போல் அழித்தது வேறு யாரும் அல்ல. நேரு விதைத்த விஷச்செடியை இந்திரா வளர்த்தார். 1976 ல் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பை மாற்றியவர் இந்திரா. தன்னுடைய பிரதமர் பதவியை காப்பாற்றவே இந்திரா அவசர நிலை கொண்டு வந்தார். அவசர நிலைக்கு எதிரான தீர்ப்பை வழங்கிய நீதிபதியை, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க மறுத்தார். இதுதான் அவர்கள் அரசியலமைப்பிற்கு காட்டிய மரியாதை.
அரசியல்சாசனத்தை காரணம் காட்டி சிலர் தங்களது தோல்வியை மறைக்க பார்க்கின்றனர். காங்., கூட்டாளிகள் சிலர் அவசர நிலை காலத்தில் சிறை சென்றவர்கள். இன்று காலத்தின் கட்டாயத்தால் அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
கட்சி தலைமை அரசின் மையமாக செயல்படுகிறது என முன்னாள் பிரதமர் மன்மோகன் தனது புத்தகத்தில் கூறியுள்ளார். கட்சியின் தலைவர் என்னை விட அதிக அதிகாரம் வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பிரதமரின் அதிகாரத்தை மீறும் வகையில் தேசிய ஆலோசனை குழு உருவாக்கப்பட்டது. பிரதமரை விட அதிக அதிகாரம் கொண்டதாக தேசிய ஆலோசகர் பதவி இருந்தது. அமைச்சரவை நிர்ணயித்த ஒரு அவசர சட்டத்தை பத்திரிகையாளர் முன்னிலையில், ஒருவர் கிழித்து எறிந்தார்.
இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியவர் முன்னாள் பிரதமர் நேரு. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பார்லிமென்டிலும் காங்கிரஸ் கட்சியினர் பேசி உள்ளனர். மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வர காங்., முயற்சி செய்கிறது. தனது ஓட்டு வங்கிக்காக இதனை செய்கிறார்கள். அக்கட்சி ஆட்சியில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. ஒரே சிவில் சட்டம் வரும் என அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் சொன்னார்கள். பொதுசிவில் சட்டம் நாடு முழுதும் அமல்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காதது காங்கிரசின் குணத்தில் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ... |