அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பது நேரு குடும்பத்தின் பாரம்பரியம்- மோடி ஆவேசம்

”அரசியலமைப்புச் சட்டத்தை அவமதிப்பது நேரு குடும்பத்தின் பாரம்பரியம். தனக்கு சாதகமாக திருத்தம் செய்யும் விதையை நேரு துவக்கினார்; இந்திரா தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அதை ராஜிவ் தொடர்ந்தார். தங்களுடைய 55 ஆண்டு ஆட்சியில் அந்த குடும்பம், 75 முறை அரசியலமைப்பை திருத்தியது. தற்போதுள்ள அந்த குடும்பத்தினர், அரசியலமைப்பை எந்தளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு துஷ்பிரயோகம் செய்கின்றனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் ஆவேசமாக கூறினார்.

நாட்டின் அரசியலமைப்பு ஏற்கப்பட்டதன், 75வது ஆண்டையொட்டி, லோக்சபாவில் இரண்டு நாள் விவாதம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடந்தன. ராஜ்யசபாவில், நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க உள்ளன.
லோக்சபாவில் பல கட்சித் தலைவர்கள் பேசியதற்கு பதிலளித்து, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டு மணி நேரம் பேசினார். அப்போது, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சின் முக்கிய அம்சங்கள்:

வேற்றுமையில் ஒற்றுமை என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலே, நம் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கமும் அதுவாகவே இருந்தது. ஆனால், அதை ஏற்க முடியாத சிலர், விஷ விதைகளை துாவினர்.

நான் காங்கிரஸ் ஆட்சியைப் பற்றி பேசவில்லை. ஒரு குடும்பம், 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அந்த குடும்பத்தை பற்றியே பேசப் போகிறேன். தங்களுக்கு இடையூறாக அல்லது பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய சட்டங்களை திருத்துவது என, இந்தக் குடும்பம், அரசியலமைப்பு சட்டத்தின் நோக்கங்களை சீரழித்தனர்.

கடந்த, 1951ல் இதை நேரு துவக்கி வைத்தார். அவரது மகள் இந்திரா, அதை தண்ணீர் ஊற்றி வளர்த்தார். இந்திராவின் மகன் ராஜிவ், அதை பராமரித்து வந்தார். தற்போதுள்ள அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தங்களுடைய குடும்ப பாரம்பரியத்தை தொடர்கின்றனர்.

பிரதமருக்கு மேலாக, ஒரு பதவியை, ராஜிவின் மனைவி சோனியாவுக்காக உருவாக்கினர். மத்திய அமைச்சரவை எடுத்த முடிவை கிழித்தெறிந்தார், சோனியாவின் மகன் ராகுல். தற்போதும் அந்த குடும்பத்தில் உள்ள ராகுல், பிரியங்கா ஆகியோர், அரசியலைப்பு சட்டத்தை தொடர்ந்து அவமதித்து வருகின்றனர். அந்தக் குடும்பம் ஆட்சியில் இருந்த, 55 ஆண்டுகளில், 75 முறை அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டது. ஒருமுறை ரத்தத்தை சுவைத்த அந்தக் குடும்பம், அதை தொடர்ந்து செய்து வருகிறது.

நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் பயணம், மிக பிரமிக்கத் தக்கது. பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்தபோதும், இன்றும் நமக்கு வழிகாட்டியாக, கலங்கரை விளக்கமாக அது விளங்குகிறது. உலகெங்கும் ஜனநாயகம் குறித்து பேசப்படும்போது, நம் அரசியலமைப்புச் சட்டம் குறித்தும் நிச்சயம் பேசப்படும். மற்ற நாடுகளில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதற்கு நீண்ட காலமான நிலையில், நம் நாட்டில், துவக்கத்திலேயே அந்த உரிமை வழங்கப்பட்டது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் பாரம்பரியம். அதையே, அரசியலமைப்பு உணர்த்துகிறது. ஆனால், மக்கள் மனதில் விஷவிதையை விதைக்க சிலர் முயற்சிக்கின்றனர். அதுவே, நேரு குடும்பத்தின் பாரம்பரியம். தனக்கு இடையூறாக இருந்த சட்டத்தை நேரு திருத்தினார். தன் பதவியை காப்பாற்ற, அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தார் இந்திரா. இதற்காக அவசரநிலையை நடைமுறைப்படுத்தினார். நம் நாட்டு ஜனநாயகத்தின் இருண்ட பக்கங்களாக அந்த காலத்தை எப்போதும் மறக்க முடியாது.

அதுவும் அரசியலமைப்பின், 25வது ஆண்டைக் கொண்டாடும்போது, அவசரநிலையை இந்திரா அறிவித்தார். காங்கிரசின் இந்த பாவத்தை அழிக்க முடியாது. இந்திராவின் வழியில் ராஜிவும், அவரைத் தொடர்ந்து தற்போதுள்ள குடும்பமும், அரசியலமைப்பு தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...