நக்சல்கள் வன்முறையை கைவிட்டு வளர்ச்சிப்பாதைக்கு வரவேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்தார். ராய்ப்பூரில் உள்ள மைதானத்தில் இன்று போலீஸ் அணிவகுப்பு நடந்தது. அதனை தொடர்ந்து ஜனாதிபதியின் காவல்துறை விருது வழங்கும் விழா நடந்தது.
காவல்துறை விருது வழங்கும் விழாவில் அமித்ஷா பேசியதாவது:
2026-மார்ச் 31க்குள் நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசும், மாநில அரசும் முடிவெடுத்துள்ளது. நக்சலிசத்திலிருந்து சத்தீஸ்கர் விடுபட்டால், நாடு முழுவதும் அச்சுறுத்தல்களும் விடுபடும். கடந்த ஓர் ஆண்டுகாலமாக, நக்சல்களுக்கு எதிராக இங்குள்ள போலீசார் உறுதி மொழி எடுத்துள்ளார்கள்.
அனைவரும் ஒன்றிணைந்து, 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் சத்தீஸ்கரில் நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிப்போம். நாளை முதல் இங்குள்ள காவல்துறையினர் தங்களுடைய சீருடையில் ஜனாதிபதி முத்திரையிடன் கம்பீரமாக வெளியே வருவார்கள். மேலும் அவர்களின் மன உறுதி பன்மடங்கு அதிகரிக்கும். நக்சல்கள் வன்முறையை கைவிட்டு, நேர்வழிப்பாதையில் வளர்ச்சிக்கு முன்வர மறுமலர்ச்சி கொள்கைகளை மாநில அரசு வகுத்துள்ளது.இது விருது மட்டும் அல்ல, அது சேவையின் அடையாளம். அர்ப்பணிப்பு, தியாகத்தின் அடையாளம்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |